Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

39

karpini-21-300x200-585x390பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும்.
ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும்.
இதற்கு நூற்கோல் என மற்றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது.
இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.
நூக்கல் காயின் பயன்கள்
குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.

குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.
நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
நூக்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.
நூக்கல் சூப்
முதலில் சீஸை(Cheese) துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
நூக்கல்லை துருவி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெய்யை உருக்கி வெங்காயத்தாள்களை அதில் போட்டு வதக்கவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியில் சூடான பால், வேகவைத்த நூக்கல், சீஸ், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் நூக்கல் சூப் ரெடி