Home பாலியல் தனி அறையில் இரவில் ஒட்டு துணி இல்லாமல் தூங்கினால் என்ன நடக்கும்? ச்சீ! என்ற சிந்தனையை...

தனி அறையில் இரவில் ஒட்டு துணி இல்லாமல் தூங்கினால் என்ன நடக்கும்? ச்சீ! என்ற சிந்தனையை கழற்றி வைத்து விட்டு உள்ளே வாங்க!

114

என்னங்க உங்களோட ஒரே ரோதனையா போச்சு! இப்படியெல்லாமா கேட்பாங்க? என்ற குழப்பம் வேண்டாங்க. பொதுவெளியில் பலரும் பேசத்தயங்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை, அலசி ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். சரி நேரா மேட்டருக்கு வருவோம். ஆடை இல்லாமல் இரவில் தூங்கினால் என்ன ஆகும்? ஒருவேளை யாராவது கதவை திறந்து பார்த்தால், திறந்து பார்த்தவருக்கு, சந்திரமுகி வடிவேலு போல, அடுத்த நாள் வேப்பிலை அடிக்கப்படலாம். ஹி! ஹி!

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னங்க. ஐஸ்லாந்து நாட்டுக்காரர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் இரவில் நிர்வாணமாகவே உறங்கும் வழக்கம் உடையவர்களாம். ஒருவேளை அவர்களை பார்த்துத்தான், இந்த சந்தேகம் மற்ற நாடுகளிலும் பரவி இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு நாட்டு மக்களுக்கு பழக்கப்பட்ட செயல் என்றால், நிச்சயம் அதில் ஏதாவது பலன் இருக்கும். அப்படி ஆடை இன்றி தூங்குவதால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தூங்குவதற்கு முன்னால் செல்போன் நோண்டுவது, டீவி பார்ப்பது எல்லாம் விட்டு தள்ளுங்க. தூங்கப்போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரிலிருந்து, உங்களைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தால், நிறைய மாற்றங்கள் உங்களிடத்தில் உண்டாகும். தூங்கும் இடம் காற்றோட்டமாகவும், உடலை தளர்வாக்கிக்கொள்ளும் அளவுக்கு விசாலமாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு உடல் தளர்வாகிறதோ, அந்த அளவுக்கு நன்மை கிடைக்குமாம். அதுவே ஆடை இல்லாமல் இருந்தால், உடலில் காற்றோட்டம் தடுக்கப்பட்ட அ ந்தரங்க பகுதி, அக்குள் ஆகியவை குளிர்ச்சியடைந்து புதுவித புத்துணர்வை கொடுக்குமாம்.

மனிதனுக்கு ஆடை அணியும் பழக்கம் வந்தது இடையில் தான் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஒரு பொருள் இயற்கையில் எதிலிருந்து வந்ததோ, அதனை நோக்கி செல்லவே எத்தனிக்கும். உதாரணத்துக்கு இரும்பு ஆக்ஸைடாக மண்ணில் இருந்து தோண்டி எடுத்து, அதனை சுத்தப்படுத்தி இரும்பாக மாற்றுகிறோம். அது மீண்டும் துரு பிடித்து இரும்பு ஆக்ஸைடாக மாறவே முயற்சி செய்யும். அது போல, மனிதன் ஆடை இன்றி இருக்கும் நிலையை நோக்கி செல்லும் போது, மனம், உடல், சுற்றுப்புறம் எல்லாமே லோசானது போன்ற உணர்வு வரும்.

நம்முடைய உடல் போடும் வேஷத்துக்கு ஏற்ப, உடையும் மாறிக்கொண்டே இருக்கும். வேலை என்றால் ஒரு ஆடை, விளையாட்டு என்றால் ஒரு ஆடை, பொதுவெளியில் என்றால் ஒரு ஆடை என்று, மனிதன் போடும் வேஷத்துக்கு ஏற்ப ஆடையும் மாறும். அதனை பார்த்து பார்த்து பழகிய மனதுக்கு, ஆடை இல்லாமல் 6-8 மணி நேரம் இருக்கும் போது, நம்மை அறியாமலே நமக்குள் இருக்கும் சில குணங்கள் வெளிப்படுமாம். இதோ ஏதோ போகும் போக்கில், அடித்துவிடப்படும் தகவல் இல்லைங்க. 2018 ஆம் ஆண்டில் வெளியான ஆய்வறிக்கையிலும் சொல்லியிருக்காங்க.

நம்ம ஊருக்கு இது பழக்கப்படாத ஒன்றாக இருந்தாலும், சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் முயற்சித்து பார்க்க வேண்டாம் சொல்லிபுட்டன். குறிப்பா படுக்கும் இடம் சுத்தமா இருக்கணும். ‘பூச்சி’ ‘கீச்சி’ ஏதாவது இருந்து, கடித்தால் கம்பெனி அதற்கு பொறுப்பேற்காது. இதயம் பலவீனமானவர்களை உங்கள் அறைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இடையில் யாராவது கதவை தட்டினால், பழக்க தோஷத்தில் உடனே சென்று திறந்துவிட வேண்டாம். மீறினால், கதவை தட்டியவர் மயக்க நிலைக்கு செல்ல நேரிடலாம்! ஹி! ஹி! ஹி!

Previous articleசட்டையை இவ்ளோ தூரம் தூக்கிட்டயேமா? உள் அங்கம் தெரிய தங்க சிலை வெளியிட்ட புகைப்படம்! கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கூட இந்த அளவிற்கு இறங்கவில்லை!
Next articleசில ஆண்கள் லேசு பட்டவர்கள் அல்ல! அண்ணன் என்று சொல்லி பழகும் ஆணை நம்பலாமா?