Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை பிறப்பிற்குப் பிந்தைய காலக்கட்டத்தை அழகாய் மாற்றும் வழிகள்!!!

குழந்தை பிறப்பிற்குப் பிந்தைய காலக்கட்டத்தை அழகாய் மாற்றும் வழிகள்!!!

11

jaffnapc-Mother-and-babyகுழந்தைப் பிறப்பு ஒரு கடினமான காரியம் தான். அது அற்புதமான, அழகான, மகிழ்ச்சியான ஏன் ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆனால் நாம் உண்மையைக் கூற வேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய விஷயம். உங்கள் புதிய எஜமானன் பிறந்து அந்த சூழ்நிலைக்கு நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள சில மாதங்கள் பிடிக்கலாம்.

நீங்கள் உங்கள் தேவைகளை இதற்காக ஒத்திப் போடவும் நேரலாம்
ஆனால் அதே வேளையில் இந்த சோர்வைத் தரக்கூடிய குழந்தையை பேணும் காலகட்டத்தில் உங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி கொள்ளலாம் என்பதை மறுப்பதற்கில்லை. பெரும்பாலானவர்கள் இந்த காலக்கட்டத்தில் தங்களை அழகாய் வைத்துக் கொள்ள முயலுவதோ அல்லது எண்ணுவதோ இல்லை. ஆனால் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் இது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகள் குழந்தை பிறப்பிற்குப் பிறகு உங்களை அழகாகவும், அமைதியாகவும், குழந்தையுடனான உங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் உதவும்.

சீருடை போன்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்
குழந்தைப் பிறப்பிற்குப் பிந்தைய முதல் மூன்று மாதங்களுக்கான உங்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரும் உடையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒரு கருப்பு லெகின்ஸ் அல்லது முழுதும் பட்டன் வைக்கப்பட்ட பூட்சுடன் உடுத்தும் உடைகள் (பாலூட்ட வசதியாக) அல்லது மேக்ஸி போன்ற உடைகள், சில தட்டையான காலணிகள் ஆகியவை சில உதாரணங்கள். இவை அனைத்திலும் ஒன்றிரண்டு வாங்கி தொடர்ந்து அவை நீடிக்கும் காலம் வரை அணிந்து கொள்ளலாம். இதனால் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் குழந்தையைக் காண வரும் போது அல்லது சில விசேஷங்களுக்காக வெளியே செல்ல வேண்டும் எனும் போது என்ன அணிய வேண்டும் என்று நீங்கள் குழம்ப வேண்டியதில்லை.

உங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்துங்கள்
இந்த சூழ்நிலைகளில் சருமப் பாதுகாப்பு பற்றியெல்லாம் பேசினால் உங்களுக்கு சிரிக்கத் தோன்றலாம். ஆனால் கொஞ்சம் கவனியுங்கள். உங்கள் குழந்தையை வெளியே ஒரு பூங்காவிற்கு நடைப் பயிற்சியாக அழைத்து செல்லும் முன் ஒரு மாய்ச்சுரைசர் அல்லது சன்ஸ்க்ரீன் எடுத்து தடவிக் கொள்ள உங்களுக்கு ஐந்து நொடிகள் போதும். இது உங்களின் தூக்கமின்றி ஈரப்பசையிழந்த சருமத்தை பாதுகாக்க உதவும் என நியூயார்க் நகர ஆர்ட் ஆப் டெர்மடாலஜி அமைப்பைச் சேர்ந்த சரும சிகிச்சை நிபுணர் ஜெசிக்கா க்ரண்ட்(எம் டி) அறிவுறுத்துகிறார். ஆனால் எப்போதும் போல் அதிகமான அழகுச் சாதனப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து எளிமையாக இதை வைத்துக் கொள்ளுங்கள். “மென்மையான சன்ஸ்க்ரீன் உள்ளடக்கிய க்ளென்சர்கள் மற்றும் மாய்ச்சுரைசர்கள் ஆகியவற்றை காலையிலும், சாதாரண க்ளென்சர்களை இரவு படுக்கும் முன்பும் பயன்படுத்துங்கள்” என டாக்டர் க்ரண்ட் கூறுகிறார்.

சிறிய டச்-அப் கூடை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் உறங்கும் போதோ, ஓய்வெடுக்கும் போதோ அல்லது பாலூட்டும் போதோ பயன்படுத்த உங்களை பொலிவுப்படுத்தும் பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு சிறிய கூடை அல்லது கண்டைனர் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சிறிய கண்ணாடி, சீப்பு, முடியைக் கட்ட பேண்டுகள் அல்லது ரிப்பன் போன்ற பொருட்கள், முகம் துடைக்கும் டிஷ்யூக்கள், உதட்டு பாம் (lip balm), உலர் ஷாம்பு (dry shampoo), நிப்பிள் கிரீம்கள் இதில் அடங்கும். குழந்தைகளுக்கான பொருட்களையும் இதில் வைத்துக் கொள்ளலாம். இதோ உங்களுக்குத் உடனடியாக தேவையானவை அனைத்தும் இந்தக் கூடையில் அடக்கம். ஏனென்றால் பாத்ரூம் அல்லது இந்த பொருட்களை வைக்கும் இடத்திற்குச் செல்வதே சில சமயம் பெரும்பாடாக இருக்கும்.

உங்கள் இருவருக்குமான ஒரு போட்டோ ஷூட்டை ஏற்பாடு செய்யுங்கள்

தாய் ஒரு தேவதை என்ற அற்புதமான உணர்வைப் பெற விருப்பமா? அப்படியானால் உங்கள் குழந்தையுடன் ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அப்பழுக்கற்ற குழந்தை செயல்கள் அவர்களின் அணிகலன்கள் நம் மனதை கொள்ளை கொள்ளக்கூடியவை. இதை மறுப்பதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை (சொன்னால் நம்புங்கள், குழந்தையின் இந்த பருவத்தின் படங்களை நீங்கள் விரும்புவீர்கள்). இதுக்கெல்லாம் போய் மெனக்கெட முடியாது என உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அதிகம் இதற்காக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. குழந்தையைப் பேணி வளர்க்கும் சில படங்களே மிகவும் அருமையான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அட, இன்ஸ்டாகிராமில் போட்டுக் கொள்ள உங்கள் துணைவர் வீட்டின் பின்புறம் எடுத்த சில படங்களே போதும் உங்களுக்கு மகிழ்வைத் தர.

நிறைய தண்ணீர் பருகுங்கள்
உங்கள் உடம்பு ஒரு மனிதனை உருவாக்கும் அற்புதச் செயலைச் செய்கிறது. அதற்கு நிறைய தண்ணீர் வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் நிறைய திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் பாலூட்டவில்லை என்றாலும் உடலில் நீர் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியாமானதும் உடலை விரைவில் குணமடையச் செய்யவும் சவுகரியமாக உணரவும் உதவும். எனவே பல முறை பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல தண்ணீர் பாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டு, நீங்களும் குழந்தையும் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்லுங்கள்.

உதவியை நாடுங்கள்
துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது? இதெல்லாம் கஷ்டமாக இருக்கிறதா? உதவிக்கு கூப்பிடுங்கள் உங்கள் துணைவரை அல்லது நெருகிய நண்பரை அல்லது உறவினரை. நம் பண்பாட்டில் பெண்கள் உதவி கோருவது சற்று கடினம் தான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு நீங்கள் உங்கள் குடும்பத்தைக் கட்டமைக்க வேண்டிய, ஓய்வெடுக்க வேண்டிய, நெடு நேரம் டிவி பார்க்க வேண்டிய உங்கள் குழந்தையின் குண்டு கன்னங்களை கண்டு கொஞ்சி மகிழ வேண்டிய நேரம். நீங்கள் வீட்டுச் சிக்கல்களைப் கருத்தில் கொள்ளாமல் உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு உங்கள் துணைவர் உதவிக்கு வருவார் என்பதில் வியப்பில்லை.
ஓய்வெடுங்கள், ஊக்கம் கொள்ளுங்கள்

அதிகம் கவலை கொள்ளாமல் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே மிகவும் முக்கியமான விஷயம் முதல் சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஒரு சில நாட்களில் நீங்கள் உங்கள் தினசரி நெருக்கடிகளிளிருந்தும் வேலைகளிலிருந்தும் விடுபட்டு ஓய்வெடுங்கள். இது உங்கள் உடல் பராமரிப்பையும் சேர்த்துத் தான். உங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவும் புத்துணர்ச்சி பெறவும் சிலவற்றை செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால் பழைய நிலைக்கு வரவேண்டும் என்ற மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காதர்கள். நாம் என்ற அந்த ஒரு புதிய சிந்தனைக்கு இடம் கொடுங்கள். உங்கள் தாய்மையை மெச்சிக் கொள்ளுங்கள்.