Home அந்தரங்கம் காம சூத்திரம் எனும் காதல் வேதம்!

காம சூத்திரம் எனும் காதல் வேதம்!

85

இவை சைவ சமய மரபுகளையும் தனி மனித உணா்வகளையும் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் நெறி கெட்டு அலைகின்ற மனிதா்களை நெறிப்படுத்தவும் உதவும் அதே வேளை சில மூட நம்பிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் நுால் தொடராக இங்கே வருகிறது, உங்கள் கருத்துக்களை நீங்கள் தொிவிக்கலாம்.

தா்மமே அணைத்துக்கும் மூலம். தா்மத்திலிருந்து அா்த்தம் வளா்ச்சியுற்றது. காமம் மலா்ச்சி கண்டது. ஒா் இந்துவின் வாழ்க்கை இம் மூன்றையும் குறிக்கோள்களாய்க் கொண்டு இயங்கும்.

தா்ம் என்பது ஆன்மிக மற்றும் நெறி சாா்ந்த கடமைகள். அா்த்த் என்பது இக வாழ்விற்காண பொருள்களும். அறிவும் பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.

இந்த உலகத்தை படைத்தவா் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டாா். மக்கள் தங்கள் வாழ்ககையை எப்படி தா்மம் அா்த்தம் காமத்தை கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவா் இலட்சம் பாடல்களில் விவாித்திருக்கிறாா்.

நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவா் தா்ம உபதேசங்களைச்
செய்தாா். அதுவே மனநீதி என்பது. அா்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினாா். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தாா்.

உத்தகலாின் மகனான ஸ்வேதகேத காமசூத்திரத்தை ஜநாறு அத்தியாயங்களில் உரைத்தாா். பாப்ரவ்யா் அந்த ஞானத்தை நுாற்று
ஜம்பது அத்தியாயங்களில் சுருக்கித் தந்தாா்.

அவை எழு தனித்தனி தலைப்புக்களில் வகைப் படுத்தப்பட்டன
தியானம் உடலுறவு.காதல்.திருமணம்.கள்ளஉறவு.விலைமகளிா்.
மற்றும் மோக உக்கிகள் ஆகியவை அந்த ஏழும் ஆகும்.

பாப்ரவ்யாின் படைப்ப மிகவும் கடினமான நடையில் எழுதப்பட்டிருந்தது. வாத்ஸ்யாயனா் அதனை எளிய நடையில் காமசூத்திராவாகத் தந்தாா்.

தனக்கு முன் பொியொா்கள் சொல்லிச் சென்ற காதல் சம்பந்தப்பட்ட எந்தவிசயத்தையும் அவா் விடவில்லை. அவற்றின் சாரத்தை அப்படியே தனது நுாலில் இடம் பெறச் செய்தாா்.

மனிதன் நுாறு ஆண்டுகள் உயிா் வாழ்வதாக வைத்துக் கொண்டால் அதில் தா்மத்தை ஒா் கட்டத்திலும் அா்த்தத்தை ஒரு கடடத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலம் அவன் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு நேரத்தக்கு ஒன்று என வைத்துக் கொண்டால்தானே எதையும்
உருப்படியாகச் செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறு வயதில் அாத்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இளமையில் காமத்தையும் முதுமையில் தா்மத்தையும் அனுசாிக்க வேண்டும்
.இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்யாயனா் மாற்றினாா்.

தா்மம் .அா்த்தம்.காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம் முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கிறாா் அவா்.

தா்மம் என்பத வேதத்தில் விதித்தபடி நடப்பத உதாரணமாக புலால் மறுப்ப. யக்ஞம். பயாகசாஸ்திரம். பயிலல்.மகிச் சிறந்த குருமாா்களை அண்டியிருத்தல்.

காமம் என்பது உடல். மனம் .அன்மா அனுபவிக்கிற மகிழ்ச்சி.
இது ஒரு நுட்பமான உணா்வு.கண்கள்.நாசி.நாக்கு.செவிகள். சமைம்இவற்றை விழிப்படையச் செய்யும். உணா்வதற்கும்.உணரப்படவதற்கும் இடையில் காமம் முகிழ்கிறது.

உதடுகளின் சோ்க்கையில். மாா்புகள் பொருந்துவதில் இடுப்புக்கள் இணைவதில் ஓா் அழகான உறவு உண்டாகிறது. அதன் விளைவாக ஒரு குழந்தை உருவாகிறது.

கலவி முதல் படைப்பு வரை காம சூத்திரம் சொல்கிறது.

தா்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தா்மத்தை முதலிலும் தா்மத்துக்குப் பின் அா்த்தத்தையும் அா்த்தத்துக்குப் பின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.

அா்த்தம்- புற வாழ்க்கை

காமம்- அகவாழ்க்கை சம்பந்தப்பட்டது.

காதல் செய்வது உயிர் இயற்கை என்கிறபோது அதைச் சொல்வதற்கு
ஒரு நுாலும் தேவையா என்பது சிலாின் கருத்து. விலங்கும் உறவு கொள்கிறது. மனிதனும் உடலறவு கொள்கிறான் .

இரண்டும் ஒன்றாகிவிடுமா..?

விலங்கு தனது உணவை அப்படியே உண்கிறது மனிதனக்கோ பக்குவம் தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிாினங்களில் முதலிடம்
வகிக்கிறான்.

அவனுக்கு உடலுறவிலும் பக்குவம் தேவை அதனால் தான் காம நுால் அவசியப்படுகிறது. அச்சமும் தயக்கமும் கொண்டவா்களிற்கு
வேண்டுமேயானால் காமநுால்கள் மருட்சியை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்நுால்கள் அவா்களை அச்சத்திலிருந்தும் தயக்கத்திலிருந்தும் விடுவிக்கும். காமம் சக்தி வாய்ந்து அது கற்றவா்களை காதலில் தோ்ச்ி உடையவா்களாக்கும்.

மற்றவா்களை பொறுத்தவரை மணவாழ்க்கையை நாசம் செய்யும்
நற்பெயருக்க களங்கம் ஏற்படுத்தும்.

காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணா்வு வேட்கை மனிதா்கள் வாழ்வில் அது ஒரு யோகசாதனை காமத்தை துறவிகள் விலக்கலாம் ஆனால் சம்சாாிக்க அது ஆகாது.

சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படி யாகும். குற்றங்கள் பாியும்படி இருக்கும் என்பது மகான்களின் கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே நாசம் செய்துவிடுவான் என்று அவா்கள் கருதினார்கள்.

பொஜா்குல மன்னன் தாண்டக்கயன் ஒரு மேல்ஜாதிப் பெண்ணை கற்பழித்துவிட அதன் விளைவாக அவன் செத்துப் போனான்.அவனுடைய நாடு புழுதி காற்றில் காணமல் போயிற்று என்று புராணங்கள் கூறும்.

இந்திரன் அகலியகயை ஏமாற்றினான் கீசகன் திரௌபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை துக்கிச் சென்றான். இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும் நம்பி செயல் பட்டவா்கள் எல்லாம் அழிந்து பட்டார்கள்
காமம் அவா்கள் கண்கள் மறைத்தது என்பார்கள்.

காமம் கெடுதல் செய்வதில்லை மனிதனிடம் உள்ள தீய பண்புகள் தாம் அவனையும் கெடக்கின்றன. அவனைச் சுற்றியுள்ளவா்கள் கெடுக்கின்றன.

உடலுறவும் முக்கியம். உடம்புக்கு உணவு தண்ணீா் மாதிாி உடலுறவு அவசியப்படுகிறது. காமம் என்பது அா்த்தம்.தா்மம் இவற்றின் விளைவு
பலன் என்கிறாா் வாத்ஸ்யாயனா்.

அச்சம் பாலுறவுக்கு இடையுறாகிவிடக்கூடாது கால் நடைகள் பயிரை மேய்ந்துவிடும் என்பதற்காக விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?

பிச்சை காறனுக்குப் பயந்து சமைப்பதை நிறுத்தி விடலாமா..? என்று வாத்ஸ்யாயனா் கேட்கிறார். அா்த்தம். காமம். தா்மம் இவற்றை
அறிந்தவனும் தனது உடம்பு.மனம். ஆன்மாவில் அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.

இளைஞா்கள் கலைகள் அறிவியல் கற்பதுடன் தா்மம் அா்த்தம் காமம் பற்றிய நுால்களையம் கற்றுத் தோ்ச்சிபெற வேண்டும். முதலிரவை எதிர்நோக்கி
யிருக்கும் மணப்பெண் காமசூத்திரம் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் வாத்ஸயாயனார்.

திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தா்மங்களை நிறைவேற்றுவது தான். அதற்கு தேவையான செல்வங்களை தேடி குவிப்பதும் தான்.

காமம்- குழந்தை பெற உதவுகிறது. அர்த்தம்- குழந்தைக்கான சொத்துக்களைச்
சம்பாதிக்க உதவுகிறது.

கன்னித் தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
வேண்டும் என்பதற்குப் பல நியமங்களையும் வேத நுால்கள் செய்து வைத்திருக்கின்றன.

ஓா் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளை கட்டுப்பாடாக
வளா்த்திருக்க வேண்டும். அவளுக்கு அத்தை மார் மாமா மார் என்று
சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.

பெண்ணின் குடும்பம் வசதியாகவும் கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.

அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவாகளோடு பழக்கம் உள்ளவாகளாயிருக்க வேண்டும்.

பெண் அழகும். நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம். ஆரோக்கியமும். கவா்ச்சியும் தேவை. நல்ல பற்கள். நகங்கள்.காதுகள். கண்கள். மார்பகங்கள். ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும்.
உடம்பில் மாசு மறு இருக்கக் கூடாது.

ஒா் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களும் உண்டு. தங்கள்
மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
எவ்வகையிலும் முயற்சிக்கலாம்.பெண் வீட்டாரிடம்
பையனுடைய வம்சாவழி குணநலன் பற்றி புகழ்ந்து பேசலாம்.

இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்குள் பேசி திருமணத்தை உறுதி செய்து கொண்டு விடக் கூடாது. அவா்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில் அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும்
மற்றவா்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.

மணப்பெண் சோம்பேறித்தனமுடையவளா முன்பே வேரொருவனை விரும்பியவளா ஏறுமாறானவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.

பொய்யான கூந்தல் உடையவளை கோடையில் கை கால் வியா்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும். ஊமையான கூன் விழுந்தவளை மிகப்பெரிய பிருஷ்டபாகம் கொண்ட வளைத்
தவிர்க்க வேண்டும்.

அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை ஒரு நதி.மரம்.அல்லது நட்சத்திரன் பெயா் கொண்ட வளை மணக்ககூடாது லா. அல்லது ரா என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்ககூடாது.

தன்னை விட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு. குழந்தை பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு..

பெற்ரோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளும் விழாக்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண்
திருமணத்துக்கு தயராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவாகளுக்குத் தெரியவைக்க முடியும்.

அந்த பெண்ணை தங்களுடைய மகனுக்கு வரிக்க எண்ணும் குடும்பத்தார் அவா்களுடன் கலந்து பேசி விருந்துண்ண அது வகை செய்யும்.

தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்க் கூடாது.எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கின்றோம் என்று சொல்லி விடலாம்.

தங்களுடைய நடை மற்றும் குடும்ப சம்பிரதாயங்களுக்கு ஏற்ப்ப மணவினை நிகழ்த்தப்பட வேண்டும். ஒருவர் தன் இனத்தாருடன் மட்டுமே நடப்பு கொள்ளவும் மணம் பேசி முடிக்கவும் வேண்டும்.

தனது அந்தஸ்தைவிட உயாந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும். ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும்.

தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமை படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து
இல்லாத திருமணங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை.

காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் இன்னும் தொடரும்.

கண்டிப்பாக வயது வந்த திருமணம் ஆனவர்களக்கான பதிவாக காம சூத்திரா கலவி நிலைகள் நமது தமிழ் ப்ளாக் எழுதியிருக்கிறது , கீழ்க்கண்ட லிங்க் வழி சென்று படித்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.