Home அந்தரங்கம் கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 02)

கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 02)

26

அ: முதலில் நமது விவாதப் புள்ளிகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வோம். நீலப்படங்களின் தன்மைகள், வகைபாடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பார்வையாளர் உளவியலுடன் அப்படங்கள் கொள்ளும் உறவு, அதன் சமூக நீட்சியாக பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் என்பதாக பேசினால் ஒரு வரிசையில் நாம் விவாதிக்க ஏதுவாய் இருக்கும்.

ஈ: நாம் எல்லோரும் வரக்கூடிய எண்ணற்றப்படங்களில் மிகக்குறைவான, படங்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். அவற்றை மட்டுமே கொண்டோ, அல்லது அவற்றுடன் ஆன நமது அனுபவங்களை மட்டுமே வைத்துக் கொண்டோ நாம் அப்படங்கள் பற்றிய முழுமையான அலசலை தரமுடியாது. நாம் அனைவரும் ஆண்கள், ஒரு பெண்ணின் உணர்வூரீதியான அனுகுதல்கள் பற்றி ஒன்றும் அறியாமல் ஒரு முழுமையான அலசலும்கூட சாத்தியமில்லை. நாம் பார்த்த படங்களின் நினைவுகளிலிருந்து சில வகைபாடுகளை செய்துகொண்டு இந்த விவாதத்தை அப்படங்கள் பற்றிய உரையாடலுக்கான துவக்கமாக மட்டுமே அமைத்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

அ: நீங்கள் கூறுவதும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நமது விவாதம் எந்தவகையிலும் ஒரு முடிவானதாகவோ, அல்லது இதுதான் என தீர்ப்புக்கூறி திணிப்பதாகவோ அமைவதில்லை – அப்படி அமைவதில் நமக்கு உடன்பாடும் இல்லை. இருப்பினும்,நமது பேச்சை ஒழுங்கமைத்துக் கொள்ளவே மேலே நான் குறிப்பிட்ட விவாதப் புள்ளிகளை முன்வைத்தேன்.

ஆ: எனக்கும் அது சரியாகவே படுகிறது. விவாதம் தொடர்பற்றதாக இல்லாமல் ஒரு ஒழுங்கு முறையில் அமைத்துக் கொள்வது நல்லது. ஆனால், அதேசமயம் முடிந்த முடிவுகள், தீர்ப்புகள், மதிப்பிடல் போன்ற மரபான ஆய்வு அதிகாரப்போக்கை தவிர்த்து திறந்த நிலையில் விவாதத்தை அமைத்துக் கொள்வதே சுதந்திரமான அறிவிற்கு வழிவகுக்கும்.

இ: ஒரு பொருள் பற்றிய விவாதம், ஆய்வு என்பது எப்படி மதிப்பீடுகள், முடிவுகள் இல்லாமல் அமைய முடியும்.

ஈ: ஏன் முடியாது! ஆய்வு என்பது நமது முடிவுகளை போய் சேருவதாக அமையாமல் நாம் புதியதை தேடிச்செல்வதாக அமைய வேண்டும். நீலப்படங்கள் சீரழிவானவை என்ற முடிவிற்கு பின் ஆய்வுசெய்து அதை நிரூபிப்பது என்பது ஒருவகை மரபான ஆய்வு முயற்சியாக மட்டுமே இருக்கிறது. நாம் செய்யப்போவது நீலப்படங்கள் பற்றிய பலவித உரையாடல்களை, கருத்துக்களை மோதவிடுவதுடன் நின்றுவிடுவோம். அதன்பின் அவற்றில் புதியவற்றை புதிய கருத்தக்களை உருவாக்கி கொள்வது வாசிப்பாளனின் வேலை. நாம் ஒருவித ஒற்றைக் கருத்து நிலையில் பேசாமல் பலவித உரையாடல், பல கருத்து நிலையிலேயே உரையாடுகிறோம்.

இ: குறிப்பாய் நீலப்படங்கள் குறித்து உரையாட வேண்டிய அவசியம் என்ன? இன்று பல பிரச்சனைகள் உள்ளபோது ஒரு குறிப்பிட்டவர்களால் பார்க்கப்படும் இப்படங்கள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

ஆ: உண்மைதான். நாம் இன்று முன் உள்ள பிரச்சனைகளை பேசவில்லை. ஆனால், அதற்காய் இதனை பேசக்கூடாது என்பதில்லை. அதேசமயம் இது எந்தவகையில் சமூகத்திற்கு பயன் உள்ளதாக அமையும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு நுண் அரசியல் தளத்திலான பேச்சு. உடல்களின் உட்செறிக்கப்பட்ட பாலியல் ஆற்றல்கள் பற்றிய பேச்சு. இதன்மூலம் உடல்களினை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள முயல்வதும். அதிகாரம் இப்பாலியல் வழியாக உடல்களை தனக்கு தக கட்டமைப்பதற்கும் இவற்றிற்கும் உள்ள உறவு பற்றியும் இத்துடன் உரையாடலை விரிவுபடுத்திக் கொள்கிறொம். அதாவது உடல் அரசியல் பற்றியதாக இந்த உரையாடலை மேலெடுத்துச் செல்ல முயல்வோம்.

அ: ஆக, இப்படங்களை சீரழிவானவை என்றோ முற்போக்கானவை என்றோ நாம் பார்க்க வேண்டிதில்லை என்கிறீர்கள். ஆனால் இப்படங்களுக்கு ஒருவகை இருத்தலும் சூழலும் இருப்பதை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அத்துடன் இப்படங்கள் பார்க்கப்படும் விதத்தில் ஒருவிதமான பாலியல் உளவியல் அமைப்பை உருவாக்ககின்றன என்ற வகையில் இந்த உரையாடல் அதை புரிந்துகொள்ள உதவலாம். இப்படங்கள் வெளிப்படுத்தும் பாலியல் பற்றிய கண்ணோட்டங்களை புரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், பாலியல் பற்றிய வெளிப்படையான உரையாடல் அற்ற நிலையில் அதனை சாத்தியமாக்குவது இப்படங்கள்தான்.

ஈ: இவை மட்டுமின்றி இந்தவகைப் படங்கள் முதலில் பாலியல் பற்றிய மனம் திறந்த உரையாடலையும் பார்க்கும் பார்வையாளர் மத்தியில் நிலவும் கூச்ச இயல்பை களைகிறது. அதாவது பார்வையாளர்களிடம் பாலியல் பற்றிய பலவிதமான பயங்களை போக்குகிறது. அத்துடன் முக்கியமானது மதரீதியான ஒழுங்கமைப்புகள் கூறிவரும் மரபான பாலியலுக்கு எதிராக ஒருவகை ஒழுங்கற்ற பாலியலை முனவைப்பதன் மூலம் மதங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இ: இங்கு நீங்கள் இருண்டு கருத்தாக்கங்களை முன் வைத்துள்ளீர்கள். 1. மரபான பாலியல் 2. மத எதிர்ப்பு இவற்றை விளக்க முடியுமா?

ஈ: மரபான பாலியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட பாலியல் முறைகளை ம்ட்டுமே குறிப்பதாகும். அதாவது ஆண் மற்றும் பெண் உடல்களுக்கிடையில் நிலவும் பாலியல் முறைகள். அதிலும் குறிப்பாக குறிகளுக்கிடையிலான கலவியை மட்டுமே முன்னிலைப்படுத்துவது. அதாவது இனப்பெருக்க அடிப்படையிலான பாலியலை மட்டுமே முதன்மைப்படுத்துவது என்பதையே. இதை தவிர சமூகத்தில் இயக்கம் கொள்ளும் பிற பாலியல் முறைமைகள் முற்றிலுமாக சமூகத்திற்கு புறமானதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்படி புறமானதாக ஆக்கப்பட்டுள்ளதின் வழியாகத்தான் இந்த இருபாலியல் முறைமை (heterosexuality) மையமான ஆதிக்க பாலியலாக கட்டமைக்கப்பட்டது. பண்டைய காலத்தில் பாலியல் பற்றி பேசுவதற்கான தளமோ முறைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களோ இல்லை. சென்ற சில நூற்றாண்டுகளில்தான் பாலியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தனித்துறையாக கட்டமைக்கப்பட்டது. தன்பால் புணர்ச்சியாளர்களை புறமாக்கி ஒரு ‘தனிவகை’-யாக கட்டமைப்பதன்மூலம் இந்த இருபாலினபுணர்ச்சி என்பது மையமானதாக ஆக்கப்படுகிறது.

அ: நீங்கள் இரண்டாவதாக கூறிய மத எதிர்ப்பு என்பதை பார்ப்போம். மதங்களுக்கும் பாலியலுக்கும் இடையில் எதிர்மறையான உறவு உண்டு, அதாவது பாலியலை ஒடுக்கி, ஒழுங்கமைப்பதுதான் மதத்தின் முக்கியபணி என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் நீலப்படங்கள் எப்படி மத எதிர்ப்புணர்வை உருவாக்கும்?

(உரையாடல் தொடரும்)