Home அந்தரங்கம் கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 05)

கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 05)

42

ஆ: பெண்ணின் பாலியல் ஆற்றல் உடசெறிந்து காணப்படுவதற்கு பலதுறைகளிலான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இன்றைய பெண்ணின் பாலியல் ஆற்றல் செறிவும் ஆதிப்பழங்குடிப் பெண்களின் பாலியல் ஆற்றல் செறிவும் ஒன்றா? ஆதிப்பழங்குடிப் பெண்ணின் பாலியல் ஒடுக்கப்பட்டதாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இல்லாததால் அப்பெண்களின் பாலியல் ஆற்றல் ஆரம்பநிலை ஆற்றலாகவும் செறிவற்றும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டா? என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேணடியவை. பல ஆண்டுகளாய் பெண்ணை ஒடுக்கியதன் விளைவாக, இரண்டாந்தர பாலினமாக ஆக்கியதின் விளைவாக, அவர்களது ஆற்றல் செறிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என யூகிக்க ஒரு வழி இருக்கிறது. தற்காலத்தைய நரம்பியல், நினைவகம், வலி, உணர்வுகள், அறிவு ஆகியன பற்றிய உடலியல் ஆய்வுகளை கவனத்தில் கொண்டால் மேற்கண்ட யூகத்திற்கான அடிப்படைகளை அறியமுடியும். மூளையின் நினைவகம் என்பது பல புரத வேதிமங்களின் கூட்டிணைவு என்பதாகவும், செய்திகள் உயிர்வேதிச்செயல்களே என்றும், உணர்வுகள் உடலின் நரம்புகளின் இயக்கம் என்றும் அறிவியல் சாத்தியப்பாடுகளை பற்றிப் பேசும்போது ஒரு உடலுக்குள் உருவாகும் பிம்பம், கனவு, செய்திகள், நிறங்கள் ஆகிய அனைத்தையும் ஒரு சில புரதங்களின் சூத்திரமாக கற்றுவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே, பெண், பெண்ணிய பாலியல் ஆகியவற்றின் அடிப்படைகளைக்கூட பெண்ணின் உடலியல் சார்ந்த வேதிமங்களாக அறிந்துவிட முடியும்தானே. மேலும் மேலும் பெண்ணிற்கு ஆற்றல் செறிவு ஏற்படுத்தும் வண்ணம் சமூகமும், அதன் அமைப்புகளும் தொடர்ந்தால் அவை குறிப்பிட்ட புள்ளியில் உடைசலெடுத்து வெளிப்படுவது தவிர்க்க இயலாததாகவும் இன்னும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

இ: ஏன் இப்பொழுது பெண்கள் குறிப்பாக மேற்குலக பெண்கள் பாலியல் மாற்றுகளை தேடத்துவங்கி விட்டார்கள். இயக்கிகள், பாலின்ப நோக்கிலான பொம்மைகள், எந்திரங்கள் ஆகியவையும், லெஸ்பியானிஸம் பரவுதல் முதலியன இதற்கான துவக்கங்களாக இருக்கின்றன. இவற்றின் வளர்ச்சி எதிர் உடலின் தேவையையே மறுத்துவிடக்கூடிய நிலையை உருவாக்கலாம். பாலின்ப புணிதங்கள் ஒற்றை உடலுக்குள் சுருங்கிப்போய்விடக் கூடிய அபாயமும் வரலாம்.

அ: இவை விவாதத்திற்குரிய கருத்துக்கள்தான் என்றாலும் எதிர்காலத்தன்மை பற்றிய முன் யூகம் இப்போது சாத்தியமில்லை. உதாரணமாக எய்ட்ஸ்க்கு பின்பான பாலியல் பற்றிய கருத்தாக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் புனைவுகள் ஆகியன உயிர்சிதை உணர்வுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். பாலியலை உயிர் உறை உணர்விலிருந்து உயிர்சிதை உணர்வி்ற்கு மாற்றியமைத்துள்ளன. “முறையற்ற பாலியல்(?)” பற்றிய ஒரு பயத்தை கட்டமைத்துள்ளன. இது ஒரு புதிய பாலியல் அனுகுமுறையாக உள்ளது. மதங்களால் சாதிக்க முடியாத இருபாலியல், தன்பால் புணர்ச்சி மற்றும் மாற்றுப் பாலியல் புணர்ச்சிகளை (வாய்வழி மற்றும் குதவழி புணர்ச்சிகள்) ஒரு பயத்தின் வழியாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதைக் கூறலாம். இவைகள் மேலும் ஆழமான மற்றொரு விவாதத்திற்குரியவை என்பதால் மீண்டும் நீலப்படங்கள் குறித்து உரையாடலுக்கு திரும்பலாம்.

ஈ: பல படங்களில் பெண் தொடர்ந்து படத்தின் பெரும்பாலான நேரங்கள் வெவ்வேறு ஆண்களுடன் புணர்ச்சியில் ஈடுபடுவது போலவும், ஒரு பெண்ணை இரண்டு, மூன்று ஆண்கள் அல்லது ஒரு குழுவினர் வாய்வழி, குதவழி மற்றும் குறிவழிப் புணர்ச்சி செய்வது போலவும் அதை அப்பெண் அதீத மகிழ்வானுபவத்துடன் அங்கீகரிப்பது போலவும் காட்டப்படுகிறது. இப்படி ஒரு பெண்ணை யதார்த்தில் ஈடுபடுத்தினால் அப்பெண் குறைந்தபட்சம் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாவதையும் பூரணமாய் எந்த ஒன்றையும் நிதானித்து ஏற்றுக்கொள்ள முடியாத அவஸ்தைக்குள் ஆளாவதையும், இவ்வகை உறவுக்குப்பின் அவள் செயல்பட முடியாத சோர்வு நிலைக்கு தள்ளப்படுவதையும் எப்படத்திலும் காட்டப்படுவதில்லை. இது பார்க்கும் ஆணிற்கு பெண் உடல் பற்றிய அதீத மர்மத்தையும், பெண்ணின் பாலியல் பற்றிய அதீதப் புனைவுகளையும் தரக்கூடியதாக உள்ளது. பெண் உடலை ஒரு நுகர்விற்கான பண்டமாக இவை படைக்கின்றன என்றால் மிகையாகாது. பெண்ணிற்கும் பெண் உடலுக்கும் எதிராக கட்டமைக்கப்ட்டுள்ள ஒரு பொது மனநிலையை இவை மறுஉருவாக்கம் செய்து அதனை ஆழ்தளத்தின் உளவியலாக கட்டமைக்கின்றன. பெண்ணின் உடல் பாலியல் ஆற்றல்களின் தர வித்தியாசம் பற்றியோ ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் உச்ச எழுச்சியின் நேர விகிதங்கள் பற்றியோ ஒவ்வொரு பெண்ணும் தனது உடல்-பாலியல் தளத்தில் பிம்பங்கள் வழி உருவாக்கிக் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுப் பொட்டுக்கள் பற்றியோ இவ்வகைப் படங்கள் அக்கறைக் காட்டுவதில்லை. இப்படங்கள் அடிப்படையில் பெண் அதீத பாலியல் ஆற்றல் உள்ளவள் அதை தணிப்பது என்பது ஆணின் சிரமசாத்தியங்களுல் ஒன்று என்பது போல காட்டப்படுகிறது. இது குறித்து ஏலவே விரிவாக விவாதித்தாலும் தவிர்க்க முடியாமல் திரும்ப சொல்ல வேண்டியுள்ளது.

இ: ஏன் ஆண்களைக்கூடத்தான் நீண்ட நேரம் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவதுபோலவும் ஒரு பெண்ணின் பலவித செயல்களையும் ஏற்றுக்கொள்வதைப்போலவும் காட்டுகிறார்கள்.

(உரையாடல் தொடரும்)