Home அந்தரங்கம் கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!

47

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.

அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.

அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்…..

‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா நினைக்கிறாங்களே…’ என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு.

குழந்தைப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப் பத்து நிமிடங்களை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், கலவிக்கான பத்து நிமிடங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், கலவியும் அதில் கிடைக்கும் சந்தோஷமும், அதன்விளைவாக உருவாகும் குழந்தையுமே இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்.

செக்ஸ் உறவு என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாகப் பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்னையாகவே இன்னமும் இருக்கிறது.

சிக்மண்ட் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர், ‘மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக்கூடிய செக்ஸ் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், செக்ஸ் உணர்வில் மனிதர்கள் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இவருக்கு வெகு காலம் முன்னரே நமது முன்னோர்கள், செக்ஸின் அவசியத்தை வலியுறுத்தி, கோயில்களில் சிற்பங்களாவும், புனித நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எது சரியான, நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்னை?என்பதில் நன்கு படித்தவர்களுக்கும், பெரிய அறிவாளிகளுக்கும் தெளிவற்ற மனநிலையே உள்ளது.

ஜான் புரூஸ்னன் என்ற அறிவியல் அறிஞர், செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.

அதாவது, ‘ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, சராசரியாக 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையை அடைந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அமைதி பெறுவதே ஆகும்’என்று சொல்லியிருக்கிறார்.

இன்று வரை, செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதனாலே பெண்கள் முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்று பல்வேறு பிரச்னைகள், இல்வாழ்க்கைச் சிக்கல்கள், தகராறுகள், சண்டைகள், விவாகரத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் விடை சொல்வதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஆண்-பெண் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.

லிங்கம்

உள்ளே நுழையும் முன்…

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காமத்தின் குழந்தைகளே.

காமத்தை ரசனையுடன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மேற்கொண்டு உச்சகட்ட இன்பத்தை அடைவதுதான் பேரின்பம்.

அந்தக் காலத்தில் பேரின்பம் என்பதையே லிங்க வழிபாடாகப் பூஜித்து வந்தார்கள் என்பதற்கு கஜுராஹோ கோயில் சிற்பங்களும், கொக்கோகம் போன்ற பல்வேறு காம நூல்களும் சாட்சியாக விளங்குகின்றன.

அன்றைய வழிபாட்டில் வணங்கப்பட்ட லிங்கமும், அதன் கீழே இருக்கும் ஆவடையும் ஆண்-பெண் உறுப்புகளின் அம்சமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைப்பேறு மட்டுமின்றி, உடல் இன்பமும் தரக்கூடிய மனித உறுப்புகளையும், காம எண்ணங்களையும் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள்.

‘மன்மதன் ரதி’

இன்னும் சொல்லப்போனால், மனிதர்கள் எப்போதும் காமத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மன்மதன் ரதி’ என்று தேவர்களை உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார்கள்.

மனிதர்களால் போற்றி வணங்கப்பட்ட நிலையில் இருந்த காமத்தின் நிலை, இன்று தடுமாற்றமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் உச்சகட்டம் அல்லது க்ளைமாக்ஸ் அல்லது ஆர்காசம் என்று பேசினால், ஏதோ அருவருப்பான ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல் முகத்தைச் சுளிக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். உச்சகட்டம் என்றால் என்னவென்று விவரிக்கும் முன் சில கற்பனைகள்…

நல்ல பசியுடன் சாப்பாட்டு மேசையில் ஆசையுடன் சாப்பிட ஒருவர் உட்காருகிறார். தலை வாழை இலையில் மல்லிகைப்பூபோல் சூடான சாதம், கேரட் அல்வா, வெண்டைக்காய் வதக்கல், வாழைக்காய் வறுவல், கொத்தமல்லி துவையல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பூசணிக்காய் சாம்பார், மிளகு ரசம், மோர், பாயசம் என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் உணவு பரிமாறப்படுகிறது.

அமர்க்களமான விருந்தை சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கி, நாலைந்து வாய் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, அந்த உணவு முழுவதும் பறிக்கப்பட்டால் அந்த நபருக்கு எப்படி இருக்கும்?

ஒரு திரையரங்கில், சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதை சந்தோஷமாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, மின்சாரக் கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்து பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.

கை நகங்களைக் கடித்தபடி பரபரப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போது, டக்கென்று கரண்ட் போய்விட்டால் எப்படி இருக்கும்? மேலே குறிப்பிட்டதில் சாப்பாடு, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இன்பத்தை நன்றாகவே அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உச்சகட்ட இன்பமான ‘பேரின்பத்தை’ அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மைதானே?

இந்த ஏமாற்றம்  என்றாவது ஒருநாள் நிகழ்ந்தால், அதைச் தற்செயல் என்று தவிர்த்துவிடலாம். ஆனால் தினமும் நிகழ்ந்தால்…? ஆம், பலருக்கு அப்படித்தான் நிகழ்கிறது.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருமே இந்தப் பேரின்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்சகட்டத்தைப் பேரின்பம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று சண்டைக்கு வரவேண்டாம். பேரின்பம் என்பது ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளுடன் கரைந்துபோவது.

காமத்தில் பேரின்பம் என்பது இயற்கையோடு இயற்கையாக கரைந்துவிடுவது.

இந்த உச்சகட்டம் என்பதன் அர்த்தம்கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி.

ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்டபோது, அவர்கள் சொன்ன ஒரே பதில், ‘உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்’.

அதே நிறுவனம் பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா?

* அப்படின்னா… கர்ப்பம் அடைவதா?

* ஆண்களுக்கு விந்து வெளியேறுவது

* உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது

* நீண்ட நேரம் உறவுகொள்வது

* வாய் வழி உறவுகொள்வது

* உறவு முடிந்துபோதல்

* தெரியவில்லை

* இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு இல்லை

* ஆண்களுக்கு விந்து வெளியேறும்போது கிடைக்கும் உணர்வு

* ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது

* இதுவரை நான் அனுபவிக்காதது

* அது ஏதோ கெட்ட விஷயம்

* செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது

* ஆண்களுக்கு விந்து வெளியேறுதல்; பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்

* சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது

* பெண் உறுப்பில் வாய் வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்

* பகலில் இன்பம் அனுபவிப்பது

* சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது

இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.

ஆனால், பெரும்பாலானவர்களின் கருத்துகள் மேலே குறிப்பிட்டவற்றை ஒற்றியே இருந்தன.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஓரளவு படித்தவர்கள் என்பதுதான்.

ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியாமல்போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் ‘ஆணுக்குப் பெண் அடிமை’. ‘கல்லானாலும் கணவன்’ என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.

அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும், அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்துபோகிறார்கள்.

மனத்துக்குள் தம்பதியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், நேரடியாக செக்ஸ் ஆசைகளைத் தெரிவித்து, அதைப் படுக்கை அறையில் நிறைவேற்றிக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

அதனால், இருவரது செக்ஸ் ஆசைகளும் அடக்கிவைக்கப்படுகின்றன.

இப்படி அடக்கப்படும் ஆசைகள் ஏமாற்றமாக மாறி, வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பூகம்பமாக வெடித்து குடும்ப ஒற்றுமையை சிதறடிக்கிறது.

இன்று பெண்களுக்கும் பொருளாதார நம்பிக்கை இருப்பதால், தங்களது நிறைவேறாத ஆசைகளுக்குக் காரணமான கணவனைப் பிரிந்து செல்ல தைரியமாக முடிவெடுக்கிறார்கள்.

படுக்கையறையில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்த தம்பதிகளில் ஒரு சதவீதத்தினர்கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல் ஆகும்.