Home அந்தரங்கம் என் நண்பன், என் தோழியை ம யக்கி, என்னுடைய ரூ மிலேயே! ச்சே! இந்த மாதிரியான...

என் நண்பன், என் தோழியை ம யக்கி, என்னுடைய ரூ மிலேயே! ச்சே! இந்த மாதிரியான கன்றாவியான தருணத்தை எப்படி அணுகலாம்?

293

கிராமசூழல் பின்னணியில் இருந்து வந்த எனக்கு, சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணமாகிப்போன சில சீரழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது என்னுடைய நண்பன் ரூபத்தில் வருமென கனவில் கூட நினைக்கவில்லை. அவன் மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். நான் மீடியா துறையில் பணியாற்றுகிறேன். என்னுடைய வேலையை பொறுத்தவரைக்கும், எந்த நேரம் அழைத்தாலும் ஆபீஸ் போயே ஆகணும். அவனுக்கு வாரம் இருநாள் விடுமுறை. இடையில் புரோஜெக்ட் இல்லாத நேரத்தில், மாலை 4 மணிகெல்லாம் கிளம்பி வந்துருவான்.

ஞாயிற்றுகிழமை மட்டுமே இருவருக்கும் பேச நேர கிடைக்கும். மற்ற நாட்களில், நாங்கள் தங்கிருக்கும் அறை, இரவு தூக்கத்திற்கான ஒரு இடம் அவ்வளவுதான். இருவரும் பள்ளி பருவ நண்பர்கள் என்பதால், பெரிதாக சண்டை வராது. எல்லாவற்றிலும் அனுசரித்து செல்வோம். பழக்கவழக்கத்தில் அவனை குறை சொல்ல முடியாது என்றாலும், பெண்கள் விவகாரத்தில் கொஞ்சம் வீக். ஸ்கூல் படிக்கும் போதே, வகுப்பிற்கு வராமல் மட்டம் போட்டுவிட்டு, உடன் படித்த தோழியுடன் தியேட்டருக்கு சென்று மாட்டிக்கொண்டான்.

பிறகு கல்லூரி பருவத்திலும் இரண்டு, மூன்று காதல் வந்து போனது. மச்சா! இப்படி பண்ணா பிற்காலத்தில் ரொம்ப பிரச்சனை வந்துரும். பார்த்து நடந்துக்கோ என எச்சரித்தும் கேட்டபாடில்லை. அவன் வில்லங்க விளையாட்டின் விளைவு, இன்னைக்கு ஹவுஸ் ஓனரிடம் மானங்கெட்டு நிற்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. முன்னர் பள்ளி தோழியுடன் தியேட்டருக்கு போனான்னு சொன்னேன்ல, அந்த பெண்ணும் சென்னையில் தான் வேலை பார்க்கிறாங்க. அதையும் இவன் தான் எனக்கு சொன்னான்.

சரி! பள்ளி பருவ நட்பு தானே, அறியாத வயதில் ஏதோ செய்திருப்பான், இப்போ நல்ல நட்பாக தான் இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டுட்டேன். நான் வேலைக்கு போன இடைப்பட்ட நேரத்தில், இருவரும் தனிமையில் சந்தித்து எங்கள் அறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பிறகு ஹவுஸ் ஓனர் ஒரு நாள் வந்து, “உங்க ரூம்கு ஒரு பொண்ணு வந்துட்டு போகுது. ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு” என்றார்.

ஒருநாள் அந்த பெண் வரும் போது, எதேற்சையாக நானும் எங்க ரூமுக்கு வந்துட்டேன். என்னை பார்த்தவுடன், பம்மி நின்ன தோழி, உடனே ஹேண்ட்-பேக்கில் இருந்து ஒரு இன்விடேஷனை எடுத்து, என் தோழிக்கு கல்யாணம், உங்கள இன்வைட் பண்ண தான் வந்தேன் என்று சாதுர்யமாக சமாளித்துவிட்டு சென்றாள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. உடலால் இணைவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதனால் எனக்கு பாதிப்பு வரும் என்று கருதியதால், அன்று இரவே ஊருக்கே போறேன்னு சொல்லி, அறையை காலி செய்துவிட்டு போனேன். திரும்ப அந்த பக்கமே தலைகாட்டல.