Home ஆண்கள் ஆண்மை பெருக உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள் – ஒரு பார்வை

உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள் – ஒரு பார்வை

22

ஒருமுறை உடல் உறவு கொள் ளும்போது 380 முதல் 480 மில் லியன் உயிரணு பெண்ணுறுப்பு க்குள் செல்லும். இந்த உயிர ணுக்கள் பெண்குறி பாதை, கர் ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால்,480 மில்லி யன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள்செல்லு ம். இவற்றிலும் பல, அசைந்து கொண் டேயிருக்கும் சீலியா க்களை எதிர்கொள்ள முடியா மல், இறந்து போய் சில நூறு உயிரணு க்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போ ய்நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத் துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவுடன் கருமுட்டை மூடிக்கொள் ளும். இன்னொரு உயிர ணு உள்ளே வரா மலிருக் கத்தான் இந்த ஏற்பாடு!
கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களு ம், உயிரணுவில் இருக்கு ம் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோ மோசோம்களாகி உயிர் உருவா கும்.
இயற்கைக்கு ஈடு இணை ஏது மே இல்லை என்று திரும்பத் திரும்ப… பலரும் சொல்வதற்கு என்ன காரணம் என்பது புரிகி றதா மனி தர்களே..!
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது… ஏன் இயற்கை லட்சக் கணக்கான உயிரணுக் களை விந்தில் உரு வாக்குகிறது? நியாய மான கேள்விதான்.

மராத்தான் ஓட்டம் பார்த்திருக்கிறீர்களா?

அதில் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இரு ப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயி ப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்க ளைத் தொய்வின்றி, எந்தவி தமான தங்குதடையின்றி ஓ டிச்சென்று கடக்க பலம் வே ண்டும்

அப்படிப்பட்ட சக்தியு டையவர்களை வெகு சிலரி லிருந்து கண்டுபிடிக்க முடி யாது… இருக்க மாட்டார் கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயி ரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பல லட்ச உயிரணுக்களை இயற் கை படைத்திருக்கிறது. அது மட்டும ல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிர ணு உள்ளே செல்கிறது என் றோமல்லவா… அப்போது, உயி ரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போ காது. கருமுட்டையை உயிர ணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கு ம் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கரு முட்டை க்குள் செலுத்திவிட்டு, உயிரணு வில் வாலும் உடலும் இறந்து போய் திரும்பி விடும்

.
உயிரணு கருமுட்டையை மோது ம்போது, உயிரணுவின் தலைப் பகுதியில் “அக்ரோசின்” எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட் டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெ ண்ணைக் கர்ப்பமாக்கத் தேவை யான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டு ம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் “தனது விந்து கெட் டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ…” நினைத்து கொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச் சைக்கு செல்வார்கள். அவர் களும், இதை சாக்காக வை த்துப் பணதைக் கறந்துவிடு வார்கள். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப் பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோ க்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிரு ப்பது ஒரு குறைபாடு அ ல்ல. ஆரோக் கியமான உயிரணு அதில் உள்ளதா என் பதே முக்கி யமானது. சரி, உயிர் எப்படி வளர்கிறது? உயிர் எப்படி வளர்கிற து…

கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம் பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தா ன் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தி ல் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகி விடும். அடுத்தடுத்து, அவை பன்மடங் காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மா திரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாரு லா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப்பையில் உப்பிக் கொ ண்டிருக்கும் உள்சுவரான “எண்டோமெட்ரிய”த்தில் இந்த மாருலா அமர்ந்துவி டும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வள ரும். அதன்பிறகு ஒரு புதிய ஜீவன் பூமிக்கு வந்து வெளி ச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல் லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.

ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப் பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள் ளேயே கரு வாக வளரும். இதற்கு “எக்டோபிக் பிரகன ன்சி” (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக் கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால் தான் இந்த ஆபத்து.

சரி, கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?
உடலில் உள்ள ஒவ்வொரு செல் லிலும் 23 ஜோடி குரோமோசோ ம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க் கூறு போன்றவற்றை நிர்ணயிப் பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலின த்தைத் தீர்மானிக்கும் குரோ மோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகித ம் “எக்ஸ்” குரோமோசோம்களாகவு ம், 50 சதவிகிதம் “ஒய்” குரோமோ சோம்களாகவும் இருக்கும். பெண் ணின் கருமுட்டையி ல் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகித மும் “எக்ஸ்” குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயி ரணுவில் உள்ள “ஒய்” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டை யில் உள் ள “எக்ஸ்” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ்ஒய்” ஆகி, ஆண் குழந்தை உருவாகு ம். உயிர ணுவில் உள்ள “எக்ஸ் ” குரோ மோசோம் பெண் ணின் கருமுட் டையில் உள்ள “x” குரோமோ சோமுடன் சேர்ந் தால் “எக்ஸ் எக்ஸ்” ஆகி பெண் குழந்தை உருவாகும். இப்போ து ஒரு உண்மை புரிகிறதா?

ஒரு பெண்ணின் வயிற்றில் பெ ண் குழந்தை உருவாகக் கார ணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், “பொட்டை புள்ளைய பெத்துருக்கியே, உன்னை மாதிரி யே” என்று பெண்ணைத் திட்டுவார்கள். முழு க்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானி ப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!