Home அந்தரங்கம் உங்களுடைய செக்ஸ் வெற்றி எது தெரியுமா…?

உங்களுடைய செக்ஸ் வெற்றி எது தெரியுமா…?

52

ஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்… ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தக்க வைப்பது… தித்திப்பை எப்படி நீடிக்கச் செய்வது… இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறார் ஒரு நிபுணர்.

ஒவ்வொரு முறையும் உங்களது துணையைப் பார்க்கும்போதெல்லாம் நீ செக்ஸியாக இருக்கிறாய், நீ ரொம்ப ஹாட் என்று சொல்லிக் கொண்டிருங்கள். உங்கள் இருவருக்குள்ளும் பூத்த நெருப்பு தொடர்ந்து சுழன்றபடியே இருப்பதை உணர்வீர்கள் என்று கூறுகிறார் இவர்.

ஒவ்வொரு இரவையும் ரொமான்டிக் நைட்டாக மாற்றுங்கள். சின்னதோ, பெரியதோ, திடீரென வந்ததோ.. எதுவாக இருந்தாலும் கிடைத்த செக்ஸ் வாய்ப்பை விடாதீர்கள்… மறக்க முடியாத அளவுக்கு அதை டைட்டாக கொண்டாடுங்கள்.

உங்கள் பேச்சில் துணையை ஜில்லிட வையுங்கள்.. நீங்கள் பேசப் பேச அவருக்குள் பூ பூக்க வேண்டும், பூத்த வேகத்தில் காய் காத்து குலுங்கிட வேண்டும்… காய் பழமாகி, பழம் கணிந்து உங்கள் மனதில் வந்து விழ வேண்டும். அதுதான் ரொமான்ஸின் முதல் வெற்றி…

உங்கள் துணையை எப்படியெல்லாம் கொஞ்ச முடியுமோ அப்படியெல்லாம் கொஞ்சுங்கள். மடியில் சாய்த்து கவிதை பாடுங்கள்.. மலர் முகத்தை கையில் தூக்கி செல்லமாக கிசுகிசுப்பாக பேசுங்கள்… காதுகளில் முத்தமிடுங்கள்… இதழ்களில் அமுதம் பருகுங்கள்.. கண்களில் இதழ் பதித்து ஐ லவ்யூ சொல்லுங்கள்…

டான்ஸ் தெரியுமா.. கையைப் பிடித்து ஆடுங்கள்.. எடை குறைந்தவரா.. தூக்கி எடுத்து கொண்டாடுங்கள்.. இடுப்பு பிடித்து சின்னதாக சீண்டுங்கள்…

உங்களது ஒவ்வொரு அசைவிலும் செய்கையிலும் இளமை கொப்பளிக்க வேண்டும்… வேகம் கொந்தளிக்க வேண்டும்.. காதல் காட்டுத்தீயாக பற்றி எரிய வேண்டும்.. காமனை வெல்ல இந்த ரூட்தான் சரியானது…

ஒவ்வொரு நொடியிலும் அவருக்கு உங்கள் முகம் மட்டுமே தெரிய வேண்டும்.. உங்களது பெயர் மட்டுமே அவருக்கு உச்சரிக்க முடிய வேண்டும்.. சுவாசத்தில் உங்களை மட்டுமே அவர் சுவாசிக்க வேண்டும்..

மூச்சு விடும்போதும், இழுக்கும்போதும் உங்களை மட்டுமே அவர் நினைக்க வேண்டும்.. இப்படி ஆதியும் அந்தமுமாக நீங்கள் அவருக்குள் புகும்போது, பிரகாசமாக எரியத் தொடங்கும் ஜோதி…

காதலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. ரூம் போட்டெல்லாம் யோசிக்கத் தேவையில்லை..

முழுக்க முழுக்க அவரிடம் சரண்டராகி விடுங்கள். அவரை போஷித்து, பூஜித்துக் கொண்டாடுங்கள்… பிறகு பாருங்கள் அன்புச் சொரிதலை என்கிறார் அந்த நிபுணர்…
செக்ஸ் லைப் சூப்பராவே இல்லையே என்று சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அப்படிப்பட்ட வருத்தப்படும் வாலிபர் சங்க உறுப்பினர்கள், தங்களது ஜோடிகளுடன் சேர்ந்து குளித்துப் பார்த்தால்,

இந்த வருத்தம் மாறிப் போய், பிறகு அதுகுறித்து நினைக்கவே நேரம் இல்லாத அளவுக்கு ‘பிசியாக’ இருக்க முடியுமாம்… செக்ஸ் வாழ்க்கையை மேலும் ஸ்பைசியாக மாற்ற இந்த சேர்ந்து குளித்தல் உதவுகிறதாம்.

கணவனும், மனைவியுமாக சேர்ந்து குளிக்கும்போது ஏற்படும் கிளர்ச்சிக்கு எல்லையே கிடையாது.

ஈரத்துடன் இருவரும் சேர்ந்து இருக்கும்போது உணர்வுகள் படு வேகமாக தூண்டப்படும். அது இருவரது செக்ஸ் வாழ்க்கையையும் என்றும் பசுமையாக வைத்திருக்க உதவுமாம்.

முன்பு சினிமாக்களில் பார்க்கலாம் – கணவர் பாத்ரூமிலிருந்து எட்டிப் பார்த்து, அனு, டவல் கொண்டா என்பார். அவங்களும் கொண்டு வந்து நீட்டுவாங்க, அப்போது பார்த்து அனுவை அவருடைய வீட்டுக்காரர் உள்ளே இழுத்துக் கட்டிப்பிடிப்பார்.

அனுவுக்கு ரொம்ப வெக்கமாகப் போகும். இதெல்லாம் இப்போது கிடையாது. காரணம், நேரடியாக இரண்டு பேருமே சேர்ந்து பாத்ரூமுக்குள் போகும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறதாம்.

கணவனும், மனைவியுமாக சேர்ந்து குளியல் போடும் பழக்கம் இப்போது தம்பதிகளிடையே அதிகரித்துள்ளதாம். இப்படிச் செய்வதன் மூலம் தங்களுக்குள் அன்னியோன்யம், அன்பு, காதல் அதிகரிப்பதாகவும், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும் அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள்.

இப்படிக் குளிக்கும்போது பாத் டப்பில் குளிப்பதை விட ஷவரில் குளிப்பதே ரொம்ப கிக்கானதாக இருக்குமாம். பாத் டப்புக்குள் போய் குளிக்க ஆரம்பித்தால் அது குளியலை விட உறவுக்கே வேகமாக இட்டுச் செல்லுமாம்.

அது தவறில்லைதான், இருந்தாலும் ஷவரில் குளிக்கும்போது சிறிது நேர விளையாடலுக்குப் பின்னர் உறவுக்குப் போக உதவும் என்கிறார்கள். இதுகுறித்து சுகுணா என்பவர் கூறுகையில், இருவரும் சேர்ந்து குளிப்பதை நாங்கள் ரெகுலராக வைத்துள்ளோம்.

அதற்கென்று நாட்களை ஏற்கனவே பிக்ஸ் செய்து வைத்திருக்கிறோம். அந்த நாட்களில் இருவரும் சேர்ந்தே குளிப்போம். தனியாக குளிக்கும்போது இருப்பதை விட சேர்ந்து குளிக்கும்போது செம திரில்லாக இருக்கும். சில சமயங்களில் இப்படிக் குளிக்கும்போது உணர்ச்சி அதிகமாக உறவுக்கும் போய் விடுகிறோம்.

தண்ணீரில் உறவு கொள்வதும் கூட ஒரு வித திரில்லான அனுபவம்தான். சேர்ந்து குளிப்பதால் பல சந்தோஷங்கள் கிடைக்கின்றன. காதல் அதிகமாகிறது, மன இறுக்கம் படாரென்று இறங்கி விடுகிறது. மனசும், உடலும் லேசாகிறது.

இருவரது உடல்களும் சேரும்போது மனசுக்கு பெரிய சந்தோஷம். இதைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. ஏதாவது கோபதாபத்தில் இருந்தாலும் கூட சேர்ந்து குளிக்கும்போது எல்லாம் தண்ணீ்ரோடு சேர்ந்து ஓடிப் போய் விடுகிறது.

என்னைக் கேட்டால் தம்பதிகள் அடிக்கடி சேர்ந்து குளிப்பது அவர்களது வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது என்றார். முதல் முறையாக சேர்ந்து குளிக்கும் கணவர், மனைவிக்கு சில தயக்கங்கள் இருக்கலாம், சங்கடங்கள் இருக்கலாம்.

குறிப்பாக, குளிக்கும்போது கணவர் உடலைப் பார்த்து மனைவியோ அல்லது மனைவி உடலைப் பார்த்து கணவரோ மனம் நோகும்படியாக கிண்டலடித்து விடக் கூடாதாம். அதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக ஜாலியான சீண்டல்களில் அதிகம் ஈடுபட வேண்டுமாம். பிறகென்ன ஷெட்யூல் போட்டு பாத்ரூமுக்குள் பாய்ந்து விட வேண்டியதுதானே..