Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆப்பிள் பழச்சாறு உடல் எடையை குறைக்குமாம்!!!

ஆப்பிள் பழச்சாறு உடல் எடையை குறைக்குமாம்!!!

14

ஆப்பிளானது உடலுக்கு நல்லது என்பதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேப்போல் ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரும் கூட உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஒரு சிறந்த உணவுப்பொருள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகர் ஒருவித அமிலத்தன்மையை கொண்டுள்ளதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு தான் ஏற்படும். ஆகவே அதனை ஒரு நாளைக்கு 1-2 டீஸ்பூன், உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். அதிலும் அதனை சிறிது நீரில் கலந்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடுவதால் உடல் எடையானது குறைவதோடு, ஒரு சில நோய்களுக்கும் சிறந்தது.

அதிலும் உடலில் உள்ள அதிகமான கொழுப்பை கரைக்க ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகர் மிகவும் சிறந்தது. இது உடலில் உள்ள கொழுப்பை மட்டும் கரைக்காமல், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடை செய்கிறது. மேலும் வினிகரில் இருக்கும் பெக்டின் என்னும் பொருள் உடலில் இருக்கும் கொழுப்புகளை இணைத்து, உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதனால் உடனே எடை குறைவது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாததாக உள்ளது. மேலும் ஆப்பிள் பழச்சாற்றாலான வினிகரின் சுவை பிடிக்காதவர்கள், அதில் வரும் மாத்திரைகளை சாப்பிடலாம். அது கூட விரைவில் உண்ணும் உணவுகளை செரித்துவிடும்.

மேலும் ஒரு சில ஆராய்ச்சியில் ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை சாப்பிடுவதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மருந்து என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் இரவு சாப்பிடும் முன் இந்த சாற்றை குடிப்பதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு காலையில் அதிகரிக்காமல் இருக்கும் என்றும் ஆய்வானது கூறுகிறது. ஆகவே இது ஒரு சிறந்த இயற்கையான மருத்துவ குணமுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்து. இதனை அதிகம் குடித்தால் தொண்டையில் அரிப்பு ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கும் மிகவும் சிறந்தது. இதனை வாரத்திற்கு 4-5 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம். மேலும் அதனை ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், உடலில் உள்ள எடை குறைவதோடு, உடலானது ஆரோக்கியமாகவும், ஃபிட் ஆகவும் இருக்கும்.

Previous articleஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!
Next articleஇளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !