Home ஆண்கள் ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை

33

download (11)ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண் உறுப்புக் குறை பாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு கவுன்சிலிங்குடன் மருந்து மாத்திரையும் தேவைப்படும்.

உடல்ரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
1. வேகுவம் எரெக்ஷன் டிவைஸ் (Vaccum Errection Device) என்கிற நவீன சாதனத்தைப் பயன்படுத்தி விறைப்புத்தன்மைக் குறை ப்பாட்டைப் போக்கலாம். ஆணுறுப்பின் கடைசியில் ஒரு ரப்பர் பேண்டால் இறுக்கிவிட்டு, இந்தச் சாதனத்தில் உள்ள காலியான ரப்பர் குழாயை ஆணுறுப்பில் நுழைத்து நுழைத்து எடுக்கும்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடையும். இந்த ரப்பர் பேன்டை 20 நிமிடங்களுக்கு மேல் பயன் படுத்தக்கூடாது. டாக்டரி ன் ஆலோசனையின் பேரில்தான், இதைப் பயன்படுத்த வேண்டும்.

2. பீனைல் புராஸ்தெடிக் சர்ஜரி (Penile Prosthetic Surgery):
அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பின் இடையில் உள்ள குழாய் களுக்கு இடையில் சிலிக்கான் ராடு ஒன் றை வைத்து மூடி விடுவார்கள். இந்த அறுவை சிகிசை இரண்டு வகைப் படும்.
அ. மலியபிள் புராஸ்தெஸிஸ் (Malle- able Prosthesis)ஆ. இன்ஃப் ளேடபிள் புரா ஸ்தெஸிஸ் (Inflatable Prosthesis) முதல் வகையைவிட இரண்டாவது வகை அறுவை சிகிச்சைக்கு அதிகம் செல வாகும்.

மனரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
பயம், பதற்றம், படபடப்புக் காரணமாக ஆண்மைக் குறைவு என் றால், சப்போர்ட்டிவ் சைக்கோ தெரப்பி கவுன்சிலிங் அளிக்கப் படும். கவுன்சிலிங் என்றால் பல பேர் அது அட்வைஸ் என்று எடுத் துக் கொள்கிறார்கள். உண்மை யில் இது நுட்பமானது. நவீன செக்ஸ் சிகிச்சை முறைகளில் தரப்படுகிற பிஹேவியர் தெரப்பி க்குத்தான், செக்ஸ்தெரப்பி என்றுபெயர். இச்சிகிச்சைமுறை செக்ஸில் எதிர் மறையான சிந்தனைகொண்டவரை நேர்மறை யான சிந்தனை க்குக் கொண்டுவரும். ஆண்மைக் குறைவு உள்ள வர்களுக்கு, செக்ஸ் தெரப்பியில் வேறு சில உத்திகளையும் இணைத்து சொல்லித் தருகிறார்கள்.

இந்த உத்தி களை அந்த மனிதர், கையாள ஆரம்பித்த வுடன் தன்னம்பிக்கை உருவாகும்.இது தவிர, செக்ஸ் செயல்பாடுகளை ஐந்தாறு படிகளாகப் பிரித்துக் கொள் ளச் சொல்லித் தருவோம். இந்தப் கவுன்சிலி ங்குக்கு தம் பதியராகத் தான் வர வேண்டும். இதனைப் படிப் பவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்து க்கொள்ள வேண்டும். டாக்டரின் கிளினிக்கி ல் இதற் கான டெமோவோ, பயிற்சியோ கொடுக்க மாட்டோம். அவரவர் வீட்டில் தான் தனி அறையில் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுய இன்பத்தால் ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் பாதிப்பு வராது. பாதிப்பு வரும் என்பது போலி மருத்துவ ர்களால் கிளப்பி விடப்பட்ட கட்டுக் கதை. அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தில் ஈடு படும் ஆணுக்கு மனப் பதற்றம், பயம், பட படப்பு, குற்ற உணர்ச்சி காரணமாக ஆணுறுப்பு எழுச்சி அடையாமல் போக லாம். இந்த சதவிகிதமும் மிக மிகக் குறைவே.

வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு உயிர் அணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாமே தவிர, செக்ஸ் நடவடி க்கைப் பாதிக்கப்படாது.

உடல் பருமன் ஹார்மோன் குறை பாட்டைத் தூண்டி, அதன் காரணமாக ஆணுறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தலா ம். இதுவும் அரிதாக நடக்கக் கூடியதே.
குடிபோதை, செக்ஸ் நடவடிக்கையை ப் பாதிக்க வாய்ப்பு அதிகம். மதுவை குடித்தவுடன் உடனடியாக காம இச்சையைத் தூண்டும். ஆனால், செக்ஸ் நடவடிக்கைக ளை குறைத்துவிடும்.