Home ஆண்கள் ஆண்மைக் குறைக்கு ஒரு அற்புத தீர்வு

ஆண்மைக் குறைக்கு ஒரு அற்புத தீர்வு

40

முக்கால் வாசி வாலிப வயோதிக அன்பர்களின் ஆண்குறி எழுச்சியின்மைக்கு ஓரளவு நிரந்தர மற்றும் பக்கவிளைவற்ற மருத்துவ முறை சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் வெற்றிகரமாக பரிசோதித்து தற்போது ஓரிரு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

shock wave therapy:
இந்த முறை சிறுநீரகக் கல் நீக்குவதற்க்கு பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் கல் அடைத்தால், urothroscopy எனப்படும் கர்ண கடூர சிகிச்சை தான் பழக்கத்தில் இருந்தது. அதாவது ஆண்குறியில் சிறுநீர் வரும் வழியில் கேமராவுடன் கூடிய ஒரு சிறிய stone breaker உள்ளே விட்டு கல் எங்கு இருக்கிறதோ அதை உடைத்து எடுப்பார்கள். இதில் வேதனை அதிகம் (அனுபவம்), அல்லது laproscopy எனப்படும் துளையிட்டு கல்லை உடைப்பது. சமீபமாக இந்த shock wave therapy (Lithotripsy) பெருமளவில் பயன்படுகிறது. இதில் ரத்தமில்லை கத்தியில்லை. just உடம்பு பொருத்துக்கொள்ளுமளவிற்க்கு shock wave களை கல் இருக்கும் இடத்திற்கு நேரே செலுத்தி கல்லை உடைத்து எடுப்பது.

மாத்தி யோசி:
ஆகச்சிறந்த ஒரு மருத்துவ அறிவாளி சற்று மாற்றி யோசித்திருக்கிறார். இதை ஏன் நாம் விரைப்புக்குறைபாட்டிற்கு பயன்படுத்தக்கூடாதென்று. மருந்து மாத்திரையற்ற, கத்தியற்ற ரத்தமற்ற அற்புதமான மருத்துவ முறை இப்போது நமக்கு சாத்தியமாயிற்று.

விரைப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்று சுருக்கமாகப் பார்த்து விட்டு மேட்டருக்கு வருகிறேன்.

mechanisam of Erection:
ஆண்குறியில் மூன்று முக்கிய கட்டமைப்புகள் உண்டு, (படம் பார்கவும்) இரண்டு corpus covernosa (பெரிய நரம்பு கட்டுக்கள் போன்ற) அமைப்பு உண்டு. ஆண்கள் வெளித்தூண்டலால் அல்லது காம வயப்பட்டாலோ ஆர்டரியில் இருந்து வரும் ரத்தம் இந்த corpus covernosa ல் பாய்ந்து உப்புகிறது. இப்படி இந்த ரத்த நாளங்கள் மெலிதாக இருத்து ரத்தம் பாய்ந்தவுடன் பெருக்கும்போது ஆண்குறி விரைப்படைகிறது. இந்த ரத்த நாளங்கள் சரியாக விரிவடையாத போதோ அல்லது ரத்தம் பாய்வதில் சிக்கல் ஏற்படும் போதோதான் சிக்கலே.

Low-intensity Extracorporeal shock wave therapy (LI-ESWT)
இதுதான் இப்பொழுது வெற்றிகரமாக விரைப்புக்குறைபாட்டிற்கு பயன்படப்போகிறது. அதாவது சிறுநீரகக்கல்லை உடைக்க பயன்பட்ட அளவிற்கு இல்லாமல் மிகக்குறைந்த அளவில் (300 shocks, 0.09 mJ/mm(2) intensity at 120 shocks/min) ஆண்குறியின் வெளிப்புறத்தில் இடைவெளி விட்டு எல்லா பாகத்திலும் படும்படி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு கொடுக்கும் போது ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு, அடைப்புக்கள் இருந்தால் நீக்கப்பட்டு, ரத்த நாளங்கள் நன்கு விரிவடைகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்பு காம வயப்படும் ஆண்குறி விரைப்பின் அளவு கூடியிருப்பதை கண்கூடாகக் காணமுடியும்.

clinical trial result:
முக்கால்வாசி ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவனவாக இருக்கிறது. எனவே இது மருத்துவ உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. (statistical results பற்றி விரிவாகச் சொன்னால் மண்டை காயும்).
யாருக்கெல்லாம் பயன் அளிக்கும்:
1. விரைப்புக் குறைபாடு உள்ளவர்கள்
2. விட்டு விட்டு விரைப்பு ஏற்படுபவர்கள்
3. விரைப்பு மருந்துகள் வேலை செய்யாதவர்கள்
4. சட்டென விரைப்பு காணாமல் போய் எமாற்றம் அடைபவர்கள்
5. உடல் ரீதியான ரத்த அழுத்தம் சம்பத்தப்பட்ட விரைப்புக் குறைபாடு உடையவர்கள்
மருத்து முறை
தாங்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளானவர்களாயின் மனநல ஆலோசனையே போதுமானது. பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

மேற்சொன்ன பிரச்சினைகள் உடல் ரீதியானதாக இருந்தால் மட்டுமே இச்சிகிச்சையை தொடருங்கள்.

சிகிச்சை காலம்:
1. இந்த சிகிச்சை 20-30 நிமிடம் இருக்கும்.
2. வாரத்தில் எதாவது இரு நாட்கள் (3 வாரம் தொடர்ச்சியாக)
3. பிறகு 3 வாரம் இடைவெளி
4. பின்பு திரும்பவும் 3 வாரம் வாரத்தில் 2 நாட்கள்
5. மொத்தம் 12 முறை 9 வாரம்.

எங்கு எடுப்பது:
இங்கு மருத்துவமனை பற்றிய குறிப்புகளை வெளியிடுவது அவர்களுக்கு செய்யும் தனிப்பட்ட விளம்பரம் போலாகிவிடும். எனவே தனி மடலில் வரவும்.

நன்மை:
1. மருந்தில்லை எனவே பக்கவிளைவுகள் இல்லை
2. அறுவைசிகிச்சை இல்லை
3. அதிகம் பக்கவிளைவுகள் கண்டறியப்படவில்லை
4. எளிதானது
5. வலியில்லாதது
6. ஒரளவு நிரந்தரத்தீர்வுக்கானது.
7. மருத்துவ ரீதியாக பரிசோதித்து நிருபிக்கப்பட்டது.

குறிப்பு:

நண்பர்களே! இத்துனை தகவல்களையும் திரட்ட மிகுந்த காலமும், தொடர்ச்சியாக மருத்துவ நண்பர்களுடன் விவாதித்து வலைத்தளங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை முழுமையாகப் படித்து எழுதியுள்ளோம். தயவு செய்து படித்து பயன் பெற்று சிரமப்படுபவர்களுக்கு பரிந்துரை செய்து உதவுங்கள். இது போன்ற தகவல்கள் தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழி வலைப்பூக்களில் காணக்கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் cut copy paste வகைதான் அதிகம். இத்தளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்காற்றுங்கள்.