Home பாலியல் ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

22

thumbnail_20130516220049புடைத்து எழுவது முள்ளந் தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண்டாகிறது. நேரம் கெட்ட நேரத்திலும் ஏற்படுகிறது. உங்களுக்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடைத்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.

பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும் போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்து விடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஓமோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஓமோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. வளர்ச்சி ஓமோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக்கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச் செய்து, முகத்தில் உரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறிவிடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்களுக்கு மட்டுமே. இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின் போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஓமோன்கள் உறங்கும் நேரத்தில் தான் கூடுதலாகச் செயல்படுகின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ணவிடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவதில்லை.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. பீங்கான்கள் எரிய10ட்டிய பிறகு மேற்கொண்டு வளராது உள்ளதுபோன்றே தான் உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்களைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவத்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடிவுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஓமோன் இரண்டு மாறுபட்ட காரியங்களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்களுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஓமோன் செய்வது என்னவென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப்பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைகளையும் கால்களையும் பெருவிரல்களோடு முதலில் அமைத்துவிடுகிறது. ஆனால் அவை அடிப்படையான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருதுவாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகு

இந்தக் கட்டத்தில்தான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்புமயிர்தான். இதனைக் கண்;டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?

இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம்பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதைய10டாக வெளிவருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவை ஆண்குறியில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபித்து விடுகிறது. விந்து வெளியேறியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சிலவேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கியுள்ளது.