Home உறவு-காதல் ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்?

ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்?

30

13-1418463200-2dating-a-divorced-man2சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிரே திருமணம் ஆகும். ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள். கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள்.
பல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே. ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர். ஆண்கள் ஏன் தங்களின் மனைவியை ஏமாற்றுகிறார்கள்? கமல் குரானா என்ற உறவு சார்ந்த ஆலோசகர், திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக அவர் பல தம்பதிகளிடம் கலந்துரையாடி தன் முடிவை மனைவிமார்கள் பார்வையிலிருந்து வெளியிட்டார். அப்படி அவர் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா…
திருமண பந்தத்தில் கோளாறு :
வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.
உறவில் சலிப்பு தட்டும் போது ஏமாற்ற தொடங்குவார்கள் :
சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள். இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.
உடலுறவில் விதவிதமான அனுபவம் பெற ஆண்கள் ஏமாற்ற நினைப்பதுண்டு:
உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது. சில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும். புது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன், அவர்கள் எதையும் யோசிப்பதில்லை. சொல்லபோனால் செக்ஸ் விஷயத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற பெருமையே அவர்களிடம் மேலோங்கி நிற்கும்.
ஏமாற்றும் ஆண்கள் பாசத்தில் திருப்தி அடையாமல் இருப்பார்கள் :
மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆண்கள் மட்டும் என்ன மரக்கட்டைகளா என்ன? தன் மீதும் தன் மனைவி அக்கறை காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் படும் பாட்டை மனைவிகள் புரிந்து, அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பல ஆண்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று கேட்பது குழந்தைத்தனம் என்று எண்ணுவதாலேயே அவர்களுக்குள் இந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசை ஒத்துப்போவதில்லை. அதனால் மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.
சிறு வயதின் பாதிப்பும் ஏமாற்ற தூண்டும் :
சில ஆண்கள், தங்களின் குழந்தை பருவத்தில் தங்கள் பெற்றோர்கள் ஏமாற்றுவதை கண்டு வளர்ந்திருக்கலாம். இது அவர்கள் ஆழ் மனதில் தவறு என்று தெரிந்த போதிலும், எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நாம் அனைவரும் நம் பெற்றோர்களிடம் இருந்து பலவற்றை கற்பதால், இந்த விஷயத்தில் உள்ள இடர்பாட்டை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நம் மூத்த சகோதர சகோதரிகள், அண்டை வீட்டார்கள் மற்றும் உடன் பழகும் நபர்கள் ஏமாற்றுவதை நாம் காணும் போது, அது நம்மையும் தொற்றிக் கொள்ளும். சில நேரம் விடலை பையனாக, சில ஆண்கள் பல பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே அல்லது எதேர்ச்சையாக தங்களின் பழைய காதலிகளை மறுபடியும் நாடுவதுண்டு. ஆனால் சிலரோ தங்கள் கடந்த காலத்தை போலவே, இப்போதும் பல பெண்களிடம் உறவு வைத்திருப்பார்கள். நம் மனம் என்ன நினைக்கிறதோ, அதை கண்டிப்பாக அடையும் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, இவ்வகை ஆண்களை விரும்பும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஏமாற்றும் மனைவியை ஏமாற்றும் ஆண்கள் :
தங்களை ஏமாற்றும் மனைவியை பழி வாங்க பல பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். அவர்களின் மனைவிகள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் கூட இவ்வகை தொடர்புகளை சில ஆண்கள் துண்டிப்பதில்லை. தங்கள் மனைவியை மன்னிக்க மனம் இடம் கொடுக்காத கனவான்களே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.
விவாகரத்து பெறுவதற்கு மனைவியை ஏமாற்றும் ஆண்கள் :
சில ஆண்கள் வேண்டுமென்றே ஒழுக்கக்கேடாக இருப்பார்கள். இதை ஒரு சாக்காக வைத்து விவாகரத்தை நாடுவார்கள். நம் சட்டமும் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு விவாகரத்தை பெற்று தருகிறது. வேண்டுமென்றே மனைவிக்கு தெரியும் படி ஏமாற்றி, அவளை எரிச்சலடைய செய்து தானாக விவாகரத்து கேட்க வைப்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். இவ்வகை ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவ்வகை ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்று எண்ணும் போது ஆண்கள் ஏமாற்றுவார்கள் :
தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்.