Home பெண்கள் அழகு குறிப்பு அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

19

வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.
அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்.

நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.

நண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

உணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.

உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.

இரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.

மஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

உணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.

வீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செய்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.

எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.

வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.

வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.

குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.

முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.

முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.

களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.

உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.

பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.

அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.

அழகுக்கூடும்…