Home அந்தரங்கம் அடிக்கடி உறவு ஆரோக்கியத்திற்கு நல்லது!

அடிக்கடி உறவு ஆரோக்கியத்திற்கு நல்லது!

28

செக்ஸ் உறவு என்பது வெறும் உடல் ரீதியான சந்தோஷத்திற்கானது என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. காரணம், காதலுக்கும், காமத்திற்குமான வடிகால் மட்டுமல்ல செக்ஸ், அதையும் தாண்டி நமது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் அரு மருந்துதான் செக்ஸ் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனமொத்து இரு உடல்கள் இணையும்போது, அந்த இருவருக்குமே ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், வாரத்திற்கு இத்தனை நாள், மாதத்திற்கு இத்தனை நாள் என்று கணக்குப் பார்க்காமல் தினசரி செக்ஸ் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது என்பதும் இவர்களது வாதம்.

தினசரி செக்ஸ் உறவு கொள்வதால் பல பலன்கள் கிடைக்கிறதாம். உடல் எடை குறைகிறது, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது, நல்ல தூக்கம் கிடைக்கிறது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவுகிறது என்று இவர்கள் அந்த பலா பலன்களை அடுக்குகிறார்கள்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறிந்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்வோரை விட இவர்களுக்கு மிக மிக குறைந்த அளவிலான ரிஸ்க்கே இருக்கிறதாம்.

தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் இம்யூனோகுளோபின் ஏ (IgA) சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் சாதாரண காய்ச்சல், சளித் தொல்லை போன்றவை அவ்வளவு சீக்கிரம் அவர்களை அண்டுவதில்லையாம்.

குடும்பப் பாரம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், அலுவலகப் பணிகள் மற்றும் பணியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தங்களைப் போக்க அருமையான மருந்து செக்ஸ்தான் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது இந்த மன அழுத்தம் போகும் இடமே தெரிவதில்லை என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

மேலும் தினசரி உறவு வைத்துக் கொள்வோருக்கு மிகுந்த தன்னம்பிக்கையும், உற்சாகமும், உத்வேகமும் கிடைக்கிறதாம். மற்றவர்களை விட இவர்கள் அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்களாம். செய்ய வேண்டிய வேலைகளை சட்டுப்புட்டென்று முடிப்பதிலும் இவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களாம்.

அதேபோல உடல் வலி, தலைவலி உள்ளிட்ட பலவகையான வலிகளைப் போக்கும் சிறந்த வலி நிவாரணியாகவும் செக்ஸ் விளங்குகிறதாம். மாத்திரை சாப்பிடுவற்குப் பதில் உறவு கொள்வது நல்ல தீர்வு என்பது இவர்களின் வாதம். காரணம், ஆர்கஸம் எனப்படும் உச்சத்தை அடையும்போது நமது உடலில் ஆக்ஸிடாக்ஸின் எனப்படும் ஹார்மோன் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். இது தலைவலி, உடல் வலி உள்ளிட்டவற்றை விரட்டும் வல்லமை கொண்டதாகும்.

அதேபோல ஒருவருக்கு நீண்ட உச்ச நிலை ஏற்படும்போது டீஹைட்ரோஎபினான்ட்ரோஸ்டீரான் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை கொடுக்கக் கூடியதாகும். இதனால் நமது சருமம் மிகச் சிறப்பாகவும், சீக்கிரம் சுருக்கம் விழாமலும் பார்த்துக் கொள்கிறதாம். வாரத்திற்கு 2 முறை உச்சத்தை அடையும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒருமுறை உறவு வைத்துக் கொள்பவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறார்களாம்.

செக்ஸ் உறவின் மூலம் நமது ரத்த ஓட்டமும் சீராக இருக்கிறதாம். செக்ஸ் உறவின்போது நமது உறுப்புகளுக்கும், செல்களுக்கும் புது ரத்தம் பாய்வதே இதற்குக் காரணம். கிட்டத்தட்ட ஒரு ரத்த சுத்திகரிப்பே நடந்து விடுகிறது, செக்ஸ் உறவின்போது. மேலும் பழைய ரத்தம் போய் புது ரத்தம் பாயும்போது பழைய ரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் உள்ளிட்ட பிற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறுவதால், நமது உடலும் சோர்வை விட்டு உதறி புதுப்பிக்கப்பட்ட உணர்வுக்கு மாறுகிறது. இதுவே உடல் ரீதியாக நாம் உற்சாகம் பெற முக்கியக் காரணம்.

அழகான, நிறைவான, பூரணமான செக்ஸ் உறவை மேற்கொள்வோருக்கு அருமையாக தூக்கம் வரும். எனவே தூக்கம் வராமல் தவிப்போருக்கும் அருமருந்தாக இருக்கிறது செக்ஸ்.

இப்படி ஏகப்பட்ட வழிகளில் நமது உடல் ரீதியான பல மாற்றங்களுக்கு செக்ஸ் உறவு வித்திடுகிறது. எனவேதான் அவ்வப்போது வைத்துக் கொள்வதை விட அனுதினமும் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது, அதில் தவறேதும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.