Home பெண்கள் உடல் கட்டுப்பாடு x Tamil x ரன்னிங் பயிற்சியில் நீங்கள் செய்யும் தவறுகள்

x Tamil x ரன்னிங் பயிற்சியில் நீங்கள் செய்யும் தவறுகள்

21

ரன்னிங் பயிற்சியில் தீவிர வலியுடன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் சில காயத்தினால் ஏற்பட்ட அறிகுறியின் வலியாக இருக்கலாம்.

ரன்னிங் பயிற்சி செய்வதற்கு, ஷூவின் உழைப்பு, தரம், போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.

முன் பக்கமாக குனியும் போது, முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை தடுக்க ஓடும் போது, உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும்.

வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் துவங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஓட்டப் பயிற்சியை தொடங்கும் முன் முதலில் காலின் நடு பாதத்தை ஊன்ற வேண்டும். இதனால் உங்களின் ஆற்றல், திறன் அதிகமாக பயன்படுத்துவது குறையும்.

ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, கைகளை அதிகமாக ஆட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதனால் கைகளில் உள்ள ஆற்றல் திறன் குறைவதை தடுக்க முடியும்.

தினமும் ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி போன்ற எந்த பயிற்சியை செய்ய தொடங்கினாலும், நம்மால் முடியும் அளவிற்கு மிதமான அளவில் ஈடுபட வேண்டும். இதனால் நம் உடலின் வலிமையை பாதுகாக்கலாம்.