Home ஆண்கள் Vithu anu விந்தணுக்களை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 9 ஆச்சரியமூட்டும் உண்மைகள்

Vithu anu விந்தணுக்களை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 9 ஆச்சரியமூட்டும் உண்மைகள்

58

விந்தணுக்கள் இன்னொரு மனித உயிரை உருவாக்கும் சக்தி கொண்டது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில நேரங்களில் இந்த விந்தணுக்களுக்கு மனித உயிரை உருவாக்கும் அளவுக்கு சக்தி இருப்பதில்லை. இது பல காரணங்களால் நிகழலாம். விந்தணுக்கள் பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள் உள்ளன. இதனை தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

1. உணவுக்கு ஏற்ப மாற்றமடையும் ஆண்களின் விந்தணுவானது அவர்கள் சாப்பிடும் உணவுக்கு ஏற்ப மாறுபடும். ஒரு ஆண் ஒரு நாளைக்கு மூன்று அல்லது இரண்டு முறை காபி பருகினால், விந்தணுவின் அளவும் சக்தியும் குறையும். விட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் தரமும், டி.என்.ஏ பாதிப்பும் குறைகிறது. கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலமாகவும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கலாம்

2. மாதத்திற்கு 4 முறை ஒரு ஆணின் விந்தணு முழுமையான திருப்திக்கு பின்னர் தான் வெளியேற வேண்டும். பாதியில் வெளியேறுவது கூடாது. ஆரோக்கியமான விந்தணுக்களை பெற ஒரு மாதத்திற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் விந்தணுக்கள் வெளியேறுவது அவசியம்.

3. செல்போன்களால் ஆபத்து செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் ரேடியோ அலைகள் விந்தணுக்களுக்கும், பெண்களின் கருமுட்டைகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், செல்போன் மற்றும் லேப்டாபிற்காக பயன்படுத்தும் வை-பை கூட அதன் அலைக்கற்றைகளால் விந்தணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இதனால் விந்தணுக்கள் எளிதில் இறந்து விடும். அது மட்டுமின்றி டி.என்.ஏ பாதிப்படையும்.

4. விந்தணுவிற்கு ஆற்றல் தரும் பெண் விந்தணுவின் அளவை பொருத்து அது பெண்களின் கருமுட்டையை நோக்கி பயணிக்கும் காலம் தீர்மாணிக்கப்படுகிறது. இது பெண்களின் கருமுட்டையை அடைவதற்கு, பெண்களின் புரொஜஸ்டரோன் விந்தணுக்களுக்கு சக்தியை கொடுக்கிறது. இது ஆணும், பெண்ணும் ஒரு கருவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவது போல இருக்கும்.

5. விந்தணுவின் சக்தி விந்தணு கருமுட்டையின் பரப்பின் மீது உருகும் தன்மை கொண்டது. இது விந்தணுவிற்கு உள்ள மிக முக்கியமான தனித்தன்மைகளில் ஒன்று.

6. விந்தணுக்களின் வாழ்நாள் விந்தணுவானது சரியான தட்ப வெப்பநிலையில் ஒரு பெண்ணுக்குள் 5 நாட்கள் வரை வாழும். அல்லது வெப்பநிலைக்கு ஏற்ப 2 நாட்கள் வரை வாழும். இது ஒரு பெண் கருவுற போதுமானதாகும்.

7. விந்தணுக்கள் குளிர்ச்சியானவை! நாம் விந்தணுக்கள் சூடானவை என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் விந்தணுக்கள் 7 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வாழக்கூடியவை. டெஸ்டிக்கில்ஸ் விந்தணுக்களை குளுமைப்படுத்தும் ஒரு குளிர்சாதனப்பெட்டி போன்று செயல்படுகிறது. இறுக்கமான உடைகளை அணிவதால் வெப்பம் உண்டாகிறது. இதனால் தான் இறுக்கமான உடைகளை தவிர்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

8. தீய பழக்கங்களால் அழியும்! பல்வேறு ஆய்வுகளில், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை விந்தணுக்களின் அளவையும், சக்தியையும் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஆண்மை கூட பறிபோகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

9. வேகமாக வளரக்கூடியவை பெண்களின் கருமுட்டைகள் வளர நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆனால் விந்தணுக்கள் அவ்வாறு இல்லை. விந்தணுக்களின் வெளியேற்றமானது அதிகமான விந்தணுக்களை உற்பத்தி செய்துவிடுகிறது. ஆண்களின் வயதையும், ஆரோக்கியத்தையும் பொருத்து அவர்களது விந்தணுக்களின் ஆரோக்கியம் அமைகிறது