Home ஆண்கள் விதை பெரிதாவது எதனால்? இதற்கான காரணம் என்ன? எப்படி சரி செய்வது?

விதை பெரிதாவது எதனால்? இதற்கான காரணம் என்ன? எப்படி சரி செய்வது?

175

ஆண்களுக்கு திடீரென விதை பெரிதாவது எதனால்? இதற்கான காரணம் என்ன? மருத்துவம் என்ன? என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பு பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் மனதளவிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதனால் ஒட்டுமொத்த மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன.

ஆண்கள் மத்தியில் சிலருக்கு திடீரென விதை பெரிதாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சிறிய இன்பெக்ஷன்-ல் இருந்து புற்றுநோய் கட்டி வரை எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்…

காரணங்கள்! ஆண்கள் மத்தியில் விதைப்பை பெரிதாவதற்கான காரணங்கள் சில இருக்கின்றன. இன்பெக்ஷன், முறுக்கு ஏற்படுதல், கட்டி உண்டாதல் அல்லது விரை வீக்கம் போன்றவற்றால் விதை பெரிதாகும் வாய்ப்புகள் உள்ளன.

அல்ட்ராசவுண்ட்! விதை எதனால் வீக்கம் / பெரிதாகி உள்ளது என்பதை சரியாக அறிய அல்ட்ராசவுண்ட் முறையில் பரிசோதிக்க வேண்டும். மாலிக்னன்சியாக (malignancy) இருந்தால் (ஒருவகை கேன்சர் கட்டி) மேலும், இது வேகமாக பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். என்ன பிரச்சனை என அறிந்த பிறகு தான் அதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்க முடியும்.

விரை வீக்கம்! விரை வீக்கமாக இருந்தால் மைனர் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். இந்த அறுவை சிகிச்சையின் பெயர் விரைநீர்க்கட்டு அறுவை சிகிச்சை (hydrocelectomy). இதனால் விதை அளவை பழைய நிலைக்கு கொண்டுவந்துவிடலாம்.

சீழ் கழிதல் (pyuria) ஒருவேளை சிறுநீரில் சீழ் கழிதல் அல்லது விதை பகுதியில் சீழ் கழிதல் போன்ற பிரச்சனையாக இருந்தால் இதை ஆன்டி-பயாடிக்ஸ் கொண்டு சரி செய்ய வேண்டும்.

மாலிக்னன்சி! மாலிக்னன்சியாக இருந்தால் முதலில் சரியாக பரிசோதனை செய்ய வேண்டும். இது ஊர்ஜிதம் ஆனால், சிகிச்சல் மேற்கொள்ளும் முன்னரே விதைகளை நீக்க வேண்டும் என்றும், இல்லையேல் இது வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு சிடி ஸ்கேன் செய்து கட்டியை பற்றி ஆராய வேண்டியது அவசியம்.