Home பாலியல் தினமும் இவ்வளவு நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனா… உடலுறவில் எக்ஸ்ட்ரா பவர் கிடைக்குமாம்…

தினமும் இவ்வளவு நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனா… உடலுறவில் எக்ஸ்ட்ரா பவர் கிடைக்குமாம்…

34

உடலுறவின் மீதான ஆசை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் குறைந்து கொண்டு போவதாக உணர்ந்தால், அதற்காகப் பெரிதாய் அலுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் காம இச்சையைத் தூண்டிவிடக்கூடிய எளிமையான விஷயம் என்ன தெரியுமா? தூக்கம் தான்.
உங்கள் துணைவருடன் சேர்ந்து எப்போதையும் விட ஒரு மணி நேரம் கூடுதலாகத் தூங்குங்கள். அப்புறம் கண் விழித்துப் பாருங்கள். கட்டிலில் இருந்து எழுந்திருக்கவே மனம் வராத அளவுக்கு மஜாக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தூங்கும் போது மனத்தில் உள்ள கவலைகள் மறந்து போகும். மனம் அமைதியாக இருக்கும் போது, அதேசமயம் ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, இருவருடைய உடலிலும் காம இச்சையை உற்பத்தி செய்கிற ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன.

நல்ல தூக்கம் இருந்தால், உடலுறவு பற்றிய இச்சை 14 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எவரொருவர் குறைந்தது 7 மணி நேரம் 22 நிமிடங்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களோ அவருக்கு பாலியல் இச்சை அதிகரிக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு பாலியல் இச்சை தூண்டப்படுகிறது. பிறப்புறுப்பில் தூண்டுதல் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுறவு ஆசையைத் தூக்கம் தூண்டிவிடும் என்பதற்காக, அளவுக்கு மேல் தூங்கக் கூடாது. அதுவும் ஒருவகையில் ஆபத்து தான். சோம்பல் அதிகமாகிவிட்டாலும் உடலுறவில் ஈடுபடுவது சற்று கடினமாகி விடும்.