Home அழகு குறிப்பு கூந்தல் அழகு Tamil Beauty tips ரெண்டே நாளில் பொடுகை எப்படி விரட்டலாம்?

Tamil Beauty tips ரெண்டே நாளில் பொடுகை எப்படி விரட்டலாம்?

33

Dandruff issue on man’s sholder
தலைமுடி பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, அரிப்பு, சொட்டை விழுவது, இளநரை, செம்பட்டை இப்படி என்னென்ன பிரச்னைகள்?

அதில் ஆண், பெண் இருவருமே அதிகமாக சிரமத்துக்கு உள்ளாவது பொடுகுத் தொல்லையால் தான். தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு, முடி உதிர்தல், தலையில் புண் ஏற்படுதல், முகத்தில் பருக்கள், அதிகமாதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.

என்ன தான் பொடுகைப் போக்கும் ஷாம்பு, எண்ணெய்களை வாங்கி உபயோகித்தாலும், அப்போதைக்கு மட்டுமே தீர்வு கிடைக்கிறதே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைப்பதில்லை.

ஆனால் நம்முடைய வீட்டிலேயே இயற்கைப் பொருளு்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் பொடுகுத் தொல்லையைநிரந்தரமாகப் போக்கும்.

தேவையான பொருட்கள்

வேப்பிலை – 1 கைப்பிடி

துளசி – 1/2 கைப்பிடி

புதினா – 1/2 கைப்பிடி

தேங்காய் எண்ணெய் – 150 மிலி

பச்சை கற்பூரம் – சிறிது

ஓம விதைகள் – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

வேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து திக்கான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

அதன்பின் 150 மில்லி தேங்காய் எண்ணெயை 5 நிமிடங்கள் சூடாக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை கலந்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கி, இறக்குவதற்கும் 1 நிமிடத்திற்கு முன் ஓமம் மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்க்க வேண்டும்.

எண்ணெயின் சூடு ஆறும் வரை மூடியினால் அந்த எண்ணெயை மூடக் கூடாது. ஏனெனில் ஆவியினால் உண்டாகும் நீர் எண்ணெயில் விழுந்து எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை இரவில் தூங்கும் போது தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின் காலையில் குளிக்கும் முன் சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வேப்பிலை ஷாம்பு உபயோகிக்கும் போது, தலைமுடி வறட்சியாகும். இதை தடுக்க ஷாம்புடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்தால், தலைமுடி மென்மையாகுவதுடன், பொடுகும் நீங்கும்.

வேம்பு, துளசி, புதினா ஆகியவை தலைக்கு குளிச்சியை தரும் என்பதால் இது சளி, சைனஸ் தொல்லை உள்ளவர்கள் உபயோக்கிக்கக் கூடாது.