Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Beauty Tip கை விரல்களில் இதெல்லாம் செஞ்சாலே முகம் அழகாக இருக்குமாம்…

Tamil Beauty Tip கை விரல்களில் இதெல்லாம் செஞ்சாலே முகம் அழகாக இருக்குமாம்…

88

சிலர் சருமத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் கைவிரல்கள் குச்சி போலவும் சிலருக்கு சிறு வயதிலேயே அதிக சொரசொரப்புடனும் இருப்பதுண்டு. இதற்குக் காரணம் முகம் மற்றும் கை, கால்களைப் பராமரிக்கும் அளவுக்கு கை விரல்களை நாம் யாரும் கண்டு கொள்வதில்லை.

கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகளுக்கு மட்டுமே பாதிப்பு அல்ல. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும்.

இதனால் நாளடைவில் முகமும் பொலிவை இழக்கும். அதனால், விரல்களின் மென்மையை பராமரிக்க வேண்டியது முக்கியம்.

தினமும் இரவு ஒரு பாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும் வரை கைகளை அதில் மூழ்கும்படி வைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவதுடன், கை வலி நீங்கும்.

பின் கைகளைத் துடைத்துவிட்டு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக்கொண்டு, கைகளை சர்க்கரையை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். கை முழுவதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும்.

இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரை கரையும். சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால், இது கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சுருக்கங்களைப் போக்கி கைகளை புத்துணர்வோடு வைத்துக் கொள்ளும்.