Home பாலியல் பெண்களே! மாதவிடாயின்போது கட்டாயம் செய்ய வேண்டியவைகள்

பெண்களே! மாதவிடாயின்போது கட்டாயம் செய்ய வேண்டியவைகள்

29

28 நாட்களுக்கொருமுறை வரும் மாத விடாயின் போது பெண்கள் கண்டிப்பாக கவனிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற நாட்களைப் போல் இந்த நாட்களிலும் மிகச் சாதரணமாக இருந்தால் கருப்பையை பாதிக்கும்.

அந்த காலத்தில் மாதவிடாயின்போது போதுமான ஓய்வு கொடுத்து ஒதுங்கியிருக்க சொன்னதில் அறிவியல் பூர்வமாக உண்மையிருந்தாலும் இன்றைய பிஸி உலகில் அவ்வாறு இருப்பது சாத்தியமற்றது.

இருப்பினும் அந்த 3 நாட்களில் நீங்கள் கொடுக்கும் சில அக்கறையான விஷயங்கள் உங்கள் தளர்வடைந்த கருப்பையை வலுவூட்டும். அவை என்னவென்று பார்க்கலாமா?

கனமான பொருட்களை தூக்குதல் :
மாதவிடாயின்போது பளுவான பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த சமயங்களில் உண்டான இறுக்கத்தால் கர்ப்பபை கீழிறங்கி இருக்கும். பின் சில நாட்களில் தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஆனால் அந்த சமயத்தில் பளுவான பொருட்களை தூக்கினால் கர்ப்பப்பை நிரந்தரமாக கீழறங்கி ஹெர்னியா போன்ற பாதிப்புகள் வரும். ஆகவே பளுவானவற்றை தூக்காதீர்கள்.

கீரை :
பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.

இடுப்பெலும்பை பலப்படுத்த :
மாதவிடாயின்போது உளுந்தினால் செய்யப்பட்ட பதார்த்தங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும்.

குளியல் :
மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது.

பால் :
எப்போதும் பெண்கள் பால் குடிப்பது நல்லது அதிலும் மாதவிடாயின்போது தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

முட்டைகோஸ் :
முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் பெண்கள் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

ஆப்பிள் :
தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.