Home அந்தரங்கம் ஆண்களை அதிகளவில் பாதிக்கும் அந்தரங்க பிரச்சனைகள்!

ஆண்களை அதிகளவில் பாதிக்கும் அந்தரங்க பிரச்சனைகள்!

37

தாம்பத்தியம் சரியாக அமையாத ஆண்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படும். இதனால் அவர்கள் வேலை அல்லது இல்லறத்தில் கூட சரியாக ஈடுபட முடியாமல், செயற்திறன் குறைந்து காணப்படலாம்.

முக்கியமாக இந்த ஐந்து உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் ஆண்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன..

டி.இ! டி.இ என்பது Delayed Ejaculation-ஐ குறிப்பது ஆகும். விந்து வெளிப்படுவதில் தாமதம் ஆவது. இது மனோரீதியாக ஆண்களை பாதிக்கிறது. உடலுறவில் உச்சம் எட்ட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது இந்த டி.இ பிரச்சனை ஏற்படுகிறது. பார்ன் அடிக்ஷன் கொண்டுள்ள ஆண்களுக்கு இந்த பிரச்சனை குறித்த பதட்டம் அதிகம் உள்ளது. சரியான சிகிச்சை மூலம் இதற்கான நல்ல தீர்வு காண முடியும்.

முன்கூட்டி விந்து தள்ளல்! Premature ejaculation என ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த முன்கூட்டி விந்து தள்ளல் உடலுறவில் ஈடுபடும் போது மிக விரைவாக விந்து வெளிப்படும் பிரச்சனை ஆகும். ஓரிரு நிமிடத்தில் விந்து வெளிப்படும் போது முன்கூட்டி விந்து தள்ளல் என அதை குறிப்பிடுகின்றனர். பதட்டம் மற்றும் சில சைக்காலஜிக்கல் காரணங்களால் இது ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

ஈ.டி! ஈ.டி எனது விறைப்புதன்மையில் ஏற்படும் கோளாறு. சரியாக அல்லது நீண்ட நேரம் விறைப்பு ஏற்படாமல் போவது. உடலுறவில் ஈடுபடும் போது இந்த தாக்கம் ஏற்படும். சில ஆண்களுக்கு அவர்களுடைய மருத்துவ நிலை காரணத்தாலும் இது உண்டாகும். நீரிழிவு, அதிக வயது மற்றும் ஏனைய பல மருத்துவ நிலைப்பாடு காரணமாகவும் இது உண்டாகலாம். இதற்கு தீர்வு காண அவரவர் உடல்நிலை குறித்து கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

இச்சை! சிலர் மத்தியில் காரணமின்றி உடலுறுவு சார்ந்த் தூண்டுதல் ஏற்படாமல் இருக்கும். இயல்பாக சில உடல் பாகங்களை தீண்டினால் உண்டாகும் உணர்ச்சி சிலருக்கு உண்டாகாமல் போகலாம். இது பெரிய கோளாறு இல்லை. இது ஒவ்வொரு தனி நபர் உடல் சார்ந்து வேறுபாடும்.

ஆசையின்மை! ஆண், பெண் இருவர் மத்தியிலும் காணப்படும் குறைபாடு இது. சரியான அளவு உடலுறவில் ஈடுபடும் ஈர்ப்பு ஏற்படாமல் போவது. ஆண்மை குறைபாடு இருப்பவர்களிடம் இது காணப்படுகிறது. இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன்அளவு மிகவும் குறைந்து இருப்பது தான். இது மனதளவில் பெரிய தாக்கம் உண்டாக்கி பதட்டம், மன சோர்வு உண்டாக காரணியாகிறது.

குறிப்பு! இந்த வகையான தாம்பத்திய பிரச்சனைகள் உண்டாக உடல் ரீதியான காரணங்களை விட, உளவியல் ரீதியான காரணங்கள் தான் அதிகம். உளவியல் ரீதியான காரணங்களை சிகிச்சைகள் மூலம் எளிதாக சரி செய்துவிடலாம். இதற்கான சிகிச்சைகள் மற்றும் தெரபி அதிகளவில் இருக்கின்றன.