Home பெண்கள் அழகு குறிப்பு முகத்திலுள்ள கரும்புள்ளிகளைப் போக்கி பளிச்சென வைத்துக்கொள்ள இத செஞ்சாலே போதும்…

முகத்திலுள்ள கரும்புள்ளிகளைப் போக்கி பளிச்சென வைத்துக்கொள்ள இத செஞ்சாலே போதும்…

16

ஆண்களானாலும் பெண்களானாலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அது சருமத்தில் சீரற்ற தன்மையையும், பொலிவற்ற தன்மையையும் உண்டாக்குகிறது.

பெரும்பாலானவர்கள் அவற்றை நீக்குவதற்காக, கடினமான ஸ்கிரப் கொண்டு முகத்திற்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் வேறுவிதமான கடின விளைவுகளை ஏற்படுத்துமே ஒழிய கரும்புள்ளிகளைக் குறைக்காது. இவற்றை வீட்டில் கிடைக்கக் கூடிய மிக எளிமையான பொருட்களைக் கொண்டே போக்க முடியும்.

பதப்படுத்தப்பட்ட களிமண் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்கான சிறந்த பொருளாகக் கருதப்படுகிறது. களிமண்ணை முகத்தில் தடவும்போது உள்ள ஈரத்தன்மை மூலக்கூறுகளில் மின்காந்த அலைகளை உண்டாக்குகிறது. அது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதோடு சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி விடுகிறது.

குறிப்பாக, ஆண்களின் சருமம் சற்று கடினத் தன்மையுடன் இருப்பதால் மற்ற முறைகளைப் பின்பற்றுவதைவிட இந்த களிமண் பயன்படுத்துவதால் சிறந்த பலனை அடைய முடியும்.

களிமண்ணை சிறிதளவு சீடர் வினிகர் அல்லது சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி காய விடவும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் உள்ள ஈரத்தைத் துடைத்து விட்டுப் பாருங்கள். உங்களுக்கே உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தெரியும்.

உங்கள் முகத்தசைகளை இறுக்கமாக மாற்ற முட்டையின் வெள்ளைக்கரு தற்காலிகமான சிறந்த தேர்வு ஆகும். வெள்ளைக்கரு தற்காலிகமான கரும்புள்ளிகளை நீக்கினாலும்கூட கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் கரும்புள்ளிகளே வராத அளவிற்கு அவற்றைத் தடுத்திடும் ஆற்றல் கொண்டது.

முட்டையை எடுத்து அவற்றில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கரு ஆகியவற்றைத் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வெள்ளைக்கருவினை மட்டும் எடுத்து முகத்தில் பூசுங்கள். அதன் மேல் மெல்லிய டிஸ்யூ பேப்பரை வைத்து மூடி சற்று மெதுவாக சருமத்தை அழுத்தி மசாஜ் செய்யுங்கள்.

இப்போது முதலில் பூசிய முட்டைக்கலவை சற்று உலர்ந்திருக்கும். சிறிது நேரம் காயவிட்டு பின்னர் மீண்டும் அதற்கு மேலேயே இரண்டாவது முறையும் அதேபோல் பூசுங்கள். திரும்பவும் டிஸ்யூ பேப்பரை வைத்து மூடி சற்று மெதுவாக சருமத்தை அழுத்தி மசாஜ் செய்யுங்கள். பின்னர் சருமம் நன்கு காய்ந்தவுடன் நன்கு மசாஜ் செய்து பின்னர் பாசிப்பயறு பவுடர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள்.