Home உறவு-காதல் மனைவி அதிகம் சம்பாதிப்பது கணவரை பாதிக்குமா?

மனைவி அதிகம் சம்பாதிப்பது கணவரை பாதிக்குமா?

37

இன்று 2010-களில் கணவனுக்கு இணையாக மனைவி வேலைக்கு போகும் போதும் கூட மனைவி தன்னைவிட அதிக பொறுப்பில், அதிக சம்பளம் வாங்குகிறார் எனும் போது கணவன் மனதில் சந்தோஷம் இருப்பினும், ஒரு மூலையில் சிறு நெருடலும் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நிலை வீட்டில் உண்டானால், கணவன் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழ வாய்ப்புகள் உள்ளன என இங்கு காணலாம்

வீட்டின் அதிகாரம் மனைவி கைக்கு சென்றுவிடுமோ. வரவு, செலவில் துவங்கி, என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என அவர் முடிவு எடுக்கும் நிலை பிறந்துவிடுமோ என்ற அச்சம் ஆண்கள் மனதில் எழுகிறது.

மனைவி அதிகம் சம்பாதிக்கிறார், தன்னைவிட புத்திசாலியாக இருக்கிறார் என்பதால், அவர் தன் பேச்சை கேட்காமல், தன்னை அவமானப்படுத்திவிடுவாரோ என்ற எண்ணமும் ஆண்கள் மனதில் அதிகம் எழுகிறது.

வீட்டில் மனைவி சாந்தமாக இருப்பினும்.. கணவன், மனைவி உறவு சுமூகமாக நகர்ந்தாலும். இந்த உற்றார், சுற்றார்கள் ஏதாவது ஏளன பேச்சு பேசிவிடுவார்களோ என்ற பயம். இதனால் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாதோ என்ற எண்ணங்கள் பிறக்கும்.

மனைவி மீது இருந்த அதிக பாசம், அதிக சந்தேகமாக மாறும். அலுவல் வேலையாக நேரதாமதம் ஆனால் கூட, இவள் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதால் தான் இப்படி நடந்துக் கொள்கிறார் என எண்ணுவர்.

மனைவி எப்போதும் போல அக்கறையாக அறிவுரை கூறினாலும் கூட, இவள் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாள் என எண்ணுவர்

மனைவி அதிகம் சம்பாதிப்பதால். தன் ஊதியத்தை குடும்பம் நடத்தவும். அவரது ஊதியத்தை எதிர்கால திட்டங்கள் செயற்படுத்த, குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவியாக இருக்கும் என இந்த தலைமுறை கணவன்மார்கள் கூறியுள்ளனர்.