Home உறவு-காதல் பெண்களை காதலிக்க முன் இதனை செய்யுங்கள்!

பெண்களை காதலிக்க முன் இதனை செய்யுங்கள்!

24

உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண்ணை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேிப்பவராக இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விருப்பபடுவீர்கள். பிறகு அந்த பெண்ணிற்காக கொஞ்சம் கொஞ்சமாக உங்களை மாற்றிக்கொள்ள முயல்வீர்கள்.. அந்தப் பெண்ணின் மீதான அன்பை மேலும் அற்புதமான ஒன்றாக அழகான ஒன்றாக உன்னதமான ஒன்றாக மாற்றுவீர்கள்…இடையில் எவ்வளவு இழப்புகள் , வேதனைகள், உதாசினங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் சென்றுகொண்டே இருப்பீர்கள்..

உங்களின் உயிர் உள்ள வரை உங்களின் அன்பு உண்மையாக இருக்கும் வரை அந்தப் பெண் வேறு ஒருவரை நாடி சென்றாலும் ,உங்களை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்தப் பெண்ணையே நேசித்துக் கொண்டு இருப்பீர்கள்..இங்கு அன்பு என்ற உன்னதமான உணர்வு மட்டுமே பிரதானமாகிவிடுகிறது . நீங்கள் அன்பாகவே மாறிவிடுகிறீர்கள் .

நீங்கள் அந்தப் பெண்ணை மட்டுமில்லாமல் எல்லோரையும் நேசிப்பவராக மாறிவிடுகிறீர்கள் .ஒருவேளை நீங்கள் அந்த நேசத்தின் முடிவை அதாவது வெற்றி தோல்வியை எதிர்பார்த்து இருந்தால் எல்லாமுமே சிக்கலாகி விடுகிறது .உண்மையான அன்பை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது .

ஒருவேளை வாழ்க்கையை நேசிப்பவராக நீங்கள் இருந்தால் இந்த வாழ்க்கை எனக்கு எப்படி கிடைத்தது ? இதன் அர்த்தம் என்ன?? எந்த விழுமியத்தின் கீழே நான் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது? இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றால் எப்படி அர்த்தப்படுத்துவது என வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள் உங்களின் மனதை சதா பிழிந்து கொண்டே இருக்கும்….பிறகு இந்த வாழ்க்கையை மற்றவர்களைப் போல சராசரியாக வாழாமல் உன்னதமான ஒன்றாக, அழகான ஒன்றாக ,அற்புதமான ஒன்றாக மாற்ற முயற்சி செய்வீர்கள்…அப்படிச் செய்யும் போது உங்களுக்கு இழப்புகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல..உங்களின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாக மாறிவிடும்.

இங்கே ஜோனதன் லிவிங்ஸ்டன் என்ற கடல் பறவை உணவு உண்பது, சாப்பிடுவதற்காக வாழ்வது என்பதை விட அதிகமாக பறப்பதை நேசிக்கிறது .அதுவும் மிக உயரத்தில் பறப்பதை நேசிக்கிறது. தானும் மற்ற பறவைகளைப் போல எலும்பும்,சிறகும் சதையுமாக இருந்தாலும் இப்பிரபஞ்ச வெளியில் தன்னால் சாதிக்க கூடியது என்னவிருக்கிறது என்பதை கற்க மாபெரும் ஆவலை தனக்குள் பிரசவிக்கிறது.

“வாழ்வதில் உன்னதமான அர்த்தம் பொதிந்துள்ளது அதை கண்டடைய வேண்டும். நாமெல்லாம் சாதாரணமானவர்கள் இல்லை. சாப்பிடுவது, சாப்பிடுவதற்காக சண்டையிடுவது .நம்மை சுற்றியுள்ள கூட்டத்தை ஆள்வது இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் நிறைய இருக்கிறது ” என்று உணர்கிறது .”மிகவும் உன்னதமான புத்திக்கூர்மையான ஒரு படைப்பாக நம்மை நமக்குள் உணரும் போது உணவிற்காக அல்லாமல் சுதந்திரமாக பரவசத்துடன் பறத்தலின் அற்புதத்தை நம்மால் உணரமுடியும்” என்கிறது ஜோனதன் .

ஜோனதன் தன் உன்னதமான இலக்கை நோக்கிப் பயணிக்கிறது . அந்த இலக்கு என்ன ? ஜோனதன் கண்டடைந்தது என்ன ?அதற்கு முன் ஜோனதனை சுற்றியிருப்பவர்கள் யார்? அவர்கள் ஜோனதனை எப்படி பார்க்கிறார்கள் ? என்பதை முதலில் பார்போம்

ஜோனதனின் பெற்றோர்கள், சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் “பறப்பது அவ்வளவு முக்கியமானது இல்லை. உணவு தான் முக்கியம் .இந்த வாழ்க்கை புரிந்துகொள்ளப்படாமலும் ,புரிந்து கொள்ள கூடாததாகவும் இருக்கிறது ..நாம் இங்கு மரணிக்கிற வரைக்கும் சாப்பிட்டு உயிர்வாழவே இருக்கிறோம் . பறப்பது கூட உணவை தேடி கண்டடையத்தான் ,நாமெல்லாம் வெறும் எலும்புகளும் ,இறக்கைகளும் தான்”என்று ஜோனதனின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

ஜோனதனும் அவர்களின் பேச்சைக் கேட்டு உணவிற்காக பறக்க ஆரம்பிக்கிறது . ஆனால் முடிவதில்லை.. பெற்றோர்கள், தன்னுடன் இருப்பவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் தன் விருப்பபடி பறக்க ஆரம்பிக்கிறது . வித விதமான கோணங்களில் ,வேகத்தில் உயரத்தில் பறக்க முயற்சி செய்கிறது. இடையில் தோல்விகள் ஏற்பட்டாலும் அடுத்த நொடியிலே எழுந்து பறக்க ஆரம்பிக்கிறது ஜோனதன் .

ஜோனதன் தன் விருப்பப்படி செயல்படுவதால் உணவிற்காக மட்டுமே பறக்கும் கடல் பறவைகளின் கூட்டத்தில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறான் .ஜோனதன் தனிமையில் மூழ்கிறான் .அந்த தனிமையே உன்னதமான இலக்குகளை நோக்கி ஜோனதனை இழுத்துச் செல்கிறது . மேலே உயர உயர செல்ல வாழ்க்கையின் உன்னதங்களை ஜோனதன் உணர்கிறான்.இப்பூலகு இல்லாமல் மற்ற உலகத்திலும் நிறைய கற்றுக்கொள்கிறான் .அவனை போன்ற விருப்பமுள்ள,ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் கிடைக்கிறார்கள் .ஒரு குருவும் கிடைக்கிறார்.

ஜோனதன் மேலே செல்ல செல்ல பிரபஞ்ச வெளியில் தன் இருப்பை உணர்கிறான். அன்பிற்கான அர்த்தத்தை,கருணைக்கான அர்த்தத்தை காண்கிறான்.ஒரு கட்டத்தில் வேகமாக பறப்பதை விட ,உயரத்தில் பறப்பதை விட பறப்பதாகவே மாறிவிடுவதில் தான் ஆழ்ந்த பரவசம் இருக்கிறது என்பதை உணர்கிறான் . இது அவ்வளவு எளிதானது அல்ல.இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் என்கிறான்.

இறுதியில் தன் குருவின் விருப்பப்படி அன்பின் அடிப்படையில் பணியாற்ற முடிவு செய்கிறான் ஜோனதன்.

தன்னை உதாசினப் படுத்திய கூட்டத்திற்கே திரும்ப சென்று தன்னைப் போலவே விருப்பமுடையவர்களுக்கு தான் கற்று அறிந்த உணமைகளை ,உன்னதங்களை,மேன்மைகளை கற்றுக்கொடுப்பது ,அதை உணர்த்துவது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்குள் பொதிந்துள்ள நல்லவற்றை அவர்களே தங்களுக்குள் உணரச் செய்ய உதவுவது தான் அன்பு என்கிறான் ..

இந்த ஜோனதன் நமக்குள்ளும் இருக்கிறான் அவனை நாம்தான் கண்டடைய வேண்டும்.

ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் நண்பர் அவைநாயகன் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஞானப் பறவை எனும் பெயரில் வெளியாகியிருக்கிறது.