Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பின்னழகைப் பெருக்கத் துடிக்கும் பெண்கள்… அதை பார்த்து ரசிக்க துடிக்கும் ஆண்கள்…

பின்னழகைப் பெருக்கத் துடிக்கும் பெண்கள்… அதை பார்த்து ரசிக்க துடிக்கும் ஆண்கள்…

76

sona6நயன்த்தார, அசின், குஸ்பு இன்னும் பிற அழகிகளைப் போல எனக்கும் அழகான, எடுப்பான பின்னழகு வேண்டும் என்று துடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதனால் அறுவைச் சிகிச்சை மூலம் பின்னழகை எடுப்பாக்கும் பெண்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனராம்.

அழகாக இருந்தால் இன்னும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அதிலும் பெண்களைக் கேட்கவே வேண்டாம், இன்னும் இன்னும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். முன்பெல்லாம் முக அழகை மட்டுமே பெரிதாக கருதினார்கள். இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு அங்கத்தையும் அழகாக்க பெண்கள் விரும்புகிறார்கள். கை அழகு, கால் அழகு, நக அழகு, மார்பழகு, பின்னழகு, இடை அழகு, உதட்டழகு என்று ஒவ்வொரு பகுதியையும் அழகுபடுத்திக் கொள்ள அலாதிப் பிரியம் வந்து விட்டது பெண்களிடம். அந்த வகையில் தற்போது மேற்கத்திய நாடுகளில் பெருத்த, எடுப்பான பின்னழகைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.

நயன்த்தார போல………….
பெரும்பாலான பெண்களுக்கு நயன்த்தார இருப்பதைப் போன்ற எடுப்பான, அழகான பின்னழகு வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதாம். இதற்காக அதுபோன்று மாறுவதற்கு பல முயற்சிகளில் குதிக்கிறார்களாம்.

குஸ்புக்கு நல்ல கிராக்கி…………… பழையவரானாலும் குஸ்பு பின்னழகுக்கும் இன்னும் நல்ல கிராக்கி உள்ளதாம். அவரது பின்னழகைப் போல எனக்கும் வேண்டும் என்ற ஆதங்கம் பல பெண்களுக்கு எழுந்துள்ளதாம்.

கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை…………
எடுப்பான, துடிப்பான, வாளிப்பான பின்னழகைப் பெறுவதற்காக தற்போது கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறையை பெரும்பாலான பெண்கள் நாடுகின்றனராம். இது சின்னதாக உள்ள பின்புறத்தில் கொழுப்பு திசுக்களை அதிகம் செலுத்தி செயற்கையாக பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சையாகும்.

லிப்போசக்ஷன் பழைய டிரண்ட்………
முன்பெல்லாம் அதிகமாக உள்ள கொழுப்பை லிப்போசக்ஷன் மூலம் வெளியே உறிஞ்சி எடுப்பார்கள். இப்போது கொழுப்பை உட்செலுத்தி பெரிதாக்க முனைகிறார்கள்.

அவர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கே……
உடம்பில் தேவையில்லாத இடங்களில் உள்ள கொழுப்பை எடுத்து அதிகம் இல்லாத பின்புறத்திலும், மார்புகளிலும் செலுத்துவதே இந்த கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையாகும். இதனால் தேவைப்படும் கொழுப்புக்காக வேறு எங்கும் அலையாமல், சம்பந்தப்பட்டவர்களின் கொழுப்பையே பயன்படுத்த முடிகிறதாம்.

தொடை, மார்பு, பின்னழகு பெரும்பாலும்………. தொடையிலிருந்து கொழுப்பை எடுத்து, மார்பு, பின்னழகு மற்றும் முகத்தில் செலுத்தி பெரிதாக்குகிறார்களாம்.

வருஷத்துக்கு 2500 பேர்………..
வருடத்திற்கு 2500க்கும் மேற்பட்டோர் இந்த கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை நாடுகின்றனராம். கடந்த ஆண்டு 2641 பேர் இதைச் செய்துள்ளனராம்.