Home பாலியல் பருவமடைந்த அண்ணன், தங்கை ஒரே அறையில் தங்குவதால் தவறுகள் நிகழுமா?

பருவமடைந்த அண்ணன், தங்கை ஒரே அறையில் தங்குவதால் தவறுகள் நிகழுமா?

280

தற்போதுள்ள சூழலில் பணியின் நிமித்தம், அண்ணனும், தங்கையும் ஒரே அறையில் தனியாகத் தங்க நேரிடுகிறது. உடன் பெரியவர்கள் இல்லாத நிலையில் தனிமை மற்றும் பாலுணர்வு உந்துதல் காரணமாக அவர்கள் தவறு செய்து விட வாய்ப்பிருக்கிறது இல்லையா?

இந்த டெஸ்டோஸ்ட்ரான் இருக்கிறதே – அதற்கு உறவுமுறைகள் சில சமயம் புலப்படுவதில்லை என்பதால் அது ஆண்களை ‘மோசம்’ என்று முகம் சுளிக்க வைக்கும் பல அத்துமீறல்களை செய்யத் துாண்டிவிடுவது உண்டு.

அதுவும் முதிர்ச்சியடையாத வாலிபனின் மூளையில் பிரவாகமாக ஓடும் டெஸ்டோஸ்ட்ரோன் செய்யத் துாண்டும் சில்மிஷங்கள் அதிகம் – அதனால் தாய் மகன் உறவாக இருந்தாலும்கூட கொஞ்சம் இடைவெளி நல்லது.

அதற்காக ஒட்டுமொத்தமாக சந்தேகக் கண்ணோட்டத்துடன் ஆண்களைக் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் தவறு! எதற்கும் ஓர் எச்சரிக்கையாக எதிர்பாலின் நபர்களை இடைவெளி விட்டுப் பழக வைப்பது எல்லோருக்குமே நல்லது.