Home ஆண்கள் தாது விருத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?.

தாது விருத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?.

96

இன்றைய மாறிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைஞர்களில் வாழ்க்கை முறை, உணவு ஆகிய பல்வேறு விஷயங்களும் முற்றிலும் மாறிப்போய்விட்டன. அதனால் உடலுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதுடன் ஹார்மோன் பிரச்னைகளால் ஆண்மைக்குறைபாடும் உண்டாகின்றன.

இதனாலேயே திருமணத்தை தள்ளிப்போடும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல் திருமணத்துக்குப் பின்னும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா என்ற குழப்பத்தில் பல ஆண்கள் இருக்கிறார்கள்.

இதற்குத் தீர்வு முதலில் அவர்கள் இதுபோன்ற குற்ற உணர்வுகளில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்.

அதன்பிறகு நம்முடைய முன்னோர்கள் கையாண்ட சில இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்வதுடன் தாது விருத்தியைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.