Home பெண்கள் அழகு குறிப்பு தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.

தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.

29

1424439594thakkali facialமுகம் பிரகாசமாக

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம்  பிரகாசமாகும்

முகம் ஜொலிக்க

ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

தக்காளி பேஷியல்

உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரமுடியும்.

எண்ணெய் சருமத்திற்கு

ஒரு தேக்கரண்டி தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஸ் ஆயில், மூன்று தேக்கரண்டி முல்தானி மட்டி, ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும்.

சருமம் மிருதுவாக

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசினாலும் சருமம் மிருதுவாகும்