Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Tips Beauty இத செஞ்சா வழுக்கையிலும் முடி வளரும் தெரியுமா?

Tamil Tips Beauty இத செஞ்சா வழுக்கையிலும் முடி வளரும் தெரியுமா?

38

தலைமுடி உதிர்தல் பிரச்னை இல்லாத ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நாம் இருக்கும் அசுத்தமான காற்று, தூசி, ஊட்டச்சத்து குறைவான உணவுகள், ரசாயனங்கள் கலந்த ஷாம்பு என தலைமுடி உதிர்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

இந்த பிரச்னைகளை எதிர்கொண்டு ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை வழிகளைப் பின்பற்றினால் தலைமுடி உதிர்தல் பிரச்னைக்கு நல்ல தீர்வைக் காணமுடியும்.

குறிப்பாக, சில இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி வழுக்கையில் கூட முடி வளர்ச்சியைத் தூண்ட முடியும்.

ஆலிவ் ஆயிலை சூடு செய்து, அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்து, 1/2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வெந்தயம் மற்றும் சீரகத்தை ஊறவைத்து, கருவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து தலையில் தடவி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

எலுமிச்சை விதைகள், மிளகு, ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக பொடி செய்து, அதை சொட்டை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதை தினமும் இருமுறை செய்தால், சொட்டையில் முடி வளரும்.

விளக்கெண்ணெய்யை சூடுபடுத்தி, கற்பூரத்தை பொடி செய்து அதில் கரைத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு 4 நாட்கள் செய்ய வேண்டும்.