Home ஆரோக்கியம் விந்தணுவில் இருமடங்கு நிலைத்திருக்கும் ஸிகா வைரஸ்..!

விந்தணுவில் இருமடங்கு நிலைத்திருக்கும் ஸிகா வைரஸ்..!

22

zika-virusஉலகையே அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸ்,இத்தாலியைச் சேர்ந்த ஒருவரின் விந்தணுவில் ஆறு மாதங்கள் நிலைத்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நபருக்கு ஸிகா வைரஸ் தொற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு காணப்பட்டுள்ளது.ஆனால் அவர் ஆறு மாதங்களுக்கு பிறகே மருத்துவ சோதனைக்காக வந்துள்ளார்.அவரின் விந்தணுவை சோதித்து பார்த்த போது,அதில் ஸிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் உலகமெங்கும் எடுக்கப்பட்ட சோதனைகளில்,ஸிகா வைரஸ் மூன்று மாதங்கள் மட்டுமே மனிதனின் உடலில் தங்கியிருப்பதாக அறியப்பட்டது.ஆனால் தற்போது இத்தாலி நபரை சோதனை செய்ததன் மூலம் ஸிகா வைரஸ் மனித உடலில் ஆறு மாதங்கள் வரை வீரியத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் ஆணின் இனப்பெருக்க உறுப்புகளில் ஸிகா வைரஸ் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அதனால்தான் உலகில் இதற்கு முன்னர் ஸிகா வைரஸ் வீரியமாக இருந்த காலத்தை விட விந்தணுவில் இருமடங்கு காலம் ஸிகா வைரஸ் வீரியமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தாங்கள் ஏற்கனவே கணக்கிட்டதை விட அதிகமான காலகட்டம் என மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

எனவே ஸிகா வைரசுக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் உடலுறவின் போது ஆணுறை அணிய வேண்டும் அல்லது உடலுறவு கொள்வதை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் பிரான்சை சேர்ந்த நபர் ஒருவரின் உடலில் 93 நாட்கள் ஸிகா வைரஸ் வீரியமாக இருந்ததே அதிகபட்ச காலமாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.