Home ஆரோக்கியம் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் மஞ்சள் பூச்சு

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் மஞ்சள் பூச்சு

33

மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.

ஒரு காலத்தில் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள். ஆனால், மஞ்சள் பூசுபவர்களைப் பார்த்து சிரித்தவர்களை பார்த்து சிரிக்கும் வகையில் தற்போது சில அறிவியல் பூர்வ தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதில் ஒன்றுதான் இது.. மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.

அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெண்கள் குளிக்கும் போது, அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.