Home ஆரோக்கியம் பொது மருத்துவம் நீங்கள் படுக்கைக்கு செல்லும்போது செய்யகூடதவை

நீங்கள் படுக்கைக்கு செல்லும்போது செய்யகூடதவை

131

பொதுவான செய்திகள்:அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.

தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும். அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும்.

நீண்ட நேரம் லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது. அதேபோல் தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை பெண்கள் அணிந்திருப்பார்கள்.

அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.

தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர் பின் ஆகியவற்றை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.

பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.

படுக்கும் இடம் மிகவும் பஞ்சு போன்ற மென்மையான மெத்தையாக இருக்கக்கூடாது. சற்று கடினமான மெத்தையே ஆரோக்கியத்திற்கு நல்லது. மென்மையான மெத்தையில் படுப்பது முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால் தரை போன்ற கடினமான பரப்பே தூங்குவதற்கு ஏற்றது.