Home இரகசியகேள்வி-பதில் தவறான உறவிலும் உள்ளவர்களுடன் பழகலாமா ?? டாக்டர் பதில்

தவறான உறவிலும் உள்ளவர்களுடன் பழகலாமா ?? டாக்டர் பதில்

340

இரகசியகேள்வி-பதில்:எனக்கு வயது நாற்பத்தாறு. நான் திருமணமான ஆண். மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நான் என்னை விட வயதில் குறைந்த­வர்­­களுடன் குறிப்பாக, சுமார் இரு­பது, இருபத்தைந்து வயது இளை­­ஞர்களுடன் பழக வேண்டி­யிருக்கிறது. அவர்கள் அனைவரும் பெண்கள் விடயத்தில் மிக மோச­மான­வர்களாக இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல பெண்களைக் காத­லித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி, திருமணமான பெண்கள் சிலருடன் தவறான உறவிலும் ஈடுபட்டு வருகி­றார்கள். முதலில் எனக்கு இது குறித்து எரிச்சலும் கோபமும் ஏற்பட்டாலும் இப்போது நானும் அதுபோன்ற உறவொன்றை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கத் தொடங்கிவிட்டேன். எனது நிலை குறித்து எனக்கே மிக அசிங்கமாக இருக்கிறது. இந்தக் கடிதத்தையும் ஒரு பாவமன்னிப்புக் கடிதமாகவே நான் காண்கிறேன். இதில் இருந்து நான் விடுபட்டு நல்லதொரு குடும்பத் தலைவனாக வாழ என்ன வழி?

பதில்:உங்களுக்கும் அதேதான்!அதாவது, முதல் கேள்விக்குத் தரப்பட்டுள்ள பதிலே உங்களுக்கும் பொருந்தும்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் உங்கள் வரு­மான வாய்ப்பு சார்ந்ததா அல்லது பொழுதுபோக்கு சார்ந்ததா என்று தெரிய­வில்லை. எதுவாக இருந்தாலும் அது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலை­களைத் தவிர்த்துக்­கொள்வதே உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு தரும்.

தற்போதைய இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதிகளும் வாய்ப்பு­களும் உங்கள் இளம் பருவத்தில் உங்களுக்குக் கிடைத்திருக்காது. தற்போது அலைபேசி, சமூக வலைத்­­தளங்கள் மற்றும் மாறிவரும் ஆண்- – பெண் மனப்போக்குகள் என்பனவே சமூகத் தவறுகளுக்குக் காரணமாகியிருக்கின்றன.

இளைஞர்கள் மட்டுமன்றி, யுவதிகளும் கூட இந்த ‘நாகரிகத்தை’ அனுசரிக்கப் பழகிவிட்டார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் வழக்கிழந்துவிட்டது.
‘ஒரு பெண்ணுடைய அலைபேசி இலக்கம் கிடைத்துவிட்டால் போதும், தவறான உறவை ஆரம்­பிக்க’ என்ற நிலை இப்போது இருக்கி­றது. இதை யாரும் மறுக்க முடியாது. இது போன்ற உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அலுத்துப் போனதும் கழற்றிக் கொள்வதும் இந்தக் கால இளைஞர்களுக்கு கை­வந்த கலை. இந்த நிலையை உங்க­ளால் மாற்ற முடியாது. அதற்காக நீங்கள் அவர்கள் போல் மாறிவிடவும் கூடாது. இந்த நிலையில் நீங்கள் செய்யக்­கூடியது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தவிர்ப்­பது­தான்!

‘பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்றொரு பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். அவர்களுக்குப் புத்தி சொல்லித் திருத்த எண்ணுவீர்க­ளானால், அவர்கள் உங்களைத் ‘திருத்தி’ விடுவார்கள். எனவே, அது போன்ற யோசனை இருந்தால் அதை இப்போதே கைவிட்டுவிடுங்கள்.

இங்கு இன்னொரு விடயம் பற்றி­யும் சிந்திக்க வேண்டும். அவர்களு­டைய ‘அது’ போன்ற கதைகளால் நீங்கள் ஈர்க்கப்படுவது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். உங்களைச் சூடாக்கு­வதற்காகவே அவர்கள் அது போன்ற பொய்க் கதைகளைப் புனையலாம். அதை உண்மை என்று எண்ணி, நீங்களும் தவறான வழி செல்லும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்திருக்கலாம்.

எது எப்படியிருந்தபோதும் அவர்க­ளுடன் நேரத்தைச் செலவிடும் சந்­தர்ப்­பங்களைத் தவிருங்கள். வேலை செய்யும் இடத்தில்தான் இது­­போன்ற பிரச்சினை என்றால், அவர்களிட­மிருந்து விலகியே இருங்கள். அல்லது வேலையை மாற்றிக்கொள்ளுங்கள்.
—————————————————–

கருவுற்றலின் போது உறவு கொள்ளலாமா?

இது லட்சம் தம்பதிகளின் மனதில் தோன்றும் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமெனில். ஆம்! உறவு கொள்ளலாம். ஒரு பெண் கருவுற்ற பின் எப்போது வேண்டுமானாலும் தன் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவளது உடல்நிலையைப் பொறுத்தது. அதாவது, நாம் மேற்கூறியபடி ‘இரத்தப்போக்கு’ போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் தங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இதில் மிகுந்த கவனம் தேவை.

கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு அறிக்கையின்படி, திருமணமான பெண்களின் கணவருக்கு 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், அவரது மனைவியின் கருவுறுதல் வாய்ப்பு குறையும் என தெரியவந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், 25 வயது இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நாட்களை விட அவர்களுக்கு 5 மடங்கு அதிக நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவுறும் வாய்ப்பும் 23% – 38% குறைய நேரிடுமாம்.

எனவே, வாழ்க்கையில் சரியான நேரத்தில் திருமணம் செய்து, அவளை சரியாக கவனித்து, சரியான நேரத்தில் குழந்தையைப் பெற்றெடுங்கள். ஆனால் , அதை சரியாக வளர்க்கவில்லை எனும் தவறை செய்துவிடாதீர்கள்
——————————————————-

உடலுறவுக்கு பின் பெண்கள் ஏன் அழுகிறார்கள்?

உடலுறவுக்கு பின்னர் காரணமின்றி பெண்கள் அழுவதாக தெரிகிறது. அவர்களின் இந்த சோக மனநிலைக்கான காரணத்தையும் ஆய்வு ஒன்று விளக்குகிறது. உடலுறவுக்கு பின்னர் பெண்கள் பொதுவாக அழுகிறார்களாம். சினிமாவில் வருவது போன்று ஆண் – பெண் உறவுக்கு பின்னர் என் கற்பு பறி போய் விட்டதே!! அல்லது திருமணத்துக்கு முன்னரே செக்ஸ் வைத்து கொண்டோமே என்று புலம்பி அழும் அழுகை கிடையாது.

ஆண், பெண் இருவருக்கும் இடையே நடைபெறும் ஆரோக்கியமான உடலுறவுக்கு பின்னரும் பெண்கள் அழுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும், சில கசப்பான அனுபவங்கள், உடல் உறவில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உளவியல் ரீதியான சிந்தனைகள் போன்றவை தான் பெரும்பாலும் பெண்கள் அழுவதற்கும், சோகமான மனநிலைக்கு உள்ளாவதற்காண காரணம் எனவும் அந்த ஆய்வு விளக்குகிறது. அந்த ஆய்வுப்படி, ஐம்பது சதவீத பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு காரணமே இல்லாமல் அழுவதாகவும் அல்லது சோகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காரணமே இன்றி பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோகமாக இருப்பதற்கு சேர்க்கைக்கு பின்னர் ஏற்படும் பதட்டநிலையே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் உடல் அமைப்பிற்கும், பெண்களின் உடல் அமைப்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. மேலும், உறவில் ஈடுபடும் போது உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு தூண்டப்படும் ஹார்மோன்களால் காரணமின்றி கண்ணீர் வருமாம்.

முந்தைய காலங்களில் ஏதேனும் உறவில் ஈடுபட்டு, அதனால் நேர்ந்த கசப்பான அனுபவங்களும் சேர்க்கைக்கு பின்னர் ஏற்படும் பதட்ட நிலையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் முறை உடல் உறவில் ஈடுபடும் போது பெரும்பாலும் சோகம் அல்லது அழுகை வருகிறது என ஆய்வில் பங்கேற்ற பெண்கள் கூறியுள்ளனர். எனவே, இது ஆனந்த கண்ணீராகவும் பார்க்கப்படுகிறது. முரட்டுத்தனமான செக்ஸ் உறவு, கருப்பை வாயில் ஏற்படும் பலமான மோதல் காரணமாக வலி தாங்க முடியாமல் சில பெண்கள் அழுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு மூலம் வெளிவந்திருக்கும் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், பெண்களின் இத்தகைய மனநிலைக்கு ஆண்கள் காரணம் இல்லை என்பது தான். இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் இந்த சோக உணர்வை விளக்க முடியாத ஒரு உணர்வாக தான் கூறியுள்ளனர்.

Previous articleஉறவின் பின் பெண்ணுறுப்பு இதழ்கள் ஏற்படும் வலி நோய்கள்
Next articleஆண்கள் இன்பமடையாமல் போக சில முக்கிய காரணம்