Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் கால்களில் வரும் சுருக்கத்தை போக்க டிப்ஸ்

பெண்களின் கால்களில் வரும் சுருக்கத்தை போக்க டிப்ஸ்

53

அழகு குறிப்பு:பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

அவ்வாறு அழகுபடுத்தும பெண்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை மட்டும் தான் பராமரிப்பார்கள். சுருக்கங்களானது முகம், கைகளுக்கு மட்டும் வருவதில்லை, வயதானால் உடல் முழுவதும் தான் வரும். மேலும் சிலருக்கு சுருக்கங்கள் இளம் வயதிலேயே வந்துவிடும். இத்தகைய சுருக்கங்களை அழகு நிலையங்களுக்கு சென்று நீக்குவதை விட, வீட்டில் இருந்தே ஈஸியாக சரிசெய்யலாம்.

சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்

Previous articleகர்ப்பமான பெண் தொடக்க காலத்தில் எப்படி கவனமாக இருக்கவேண்டும்
Next articleஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள்