Home இரகசியகேள்வி-பதில் பெண்களுக்கான உடலுறவு உறுப்புகள் தொடர்பான டாக்டர் பதில்கள்

பெண்களுக்கான உடலுறவு உறுப்புகள் தொடர்பான டாக்டர் பதில்கள்

306

பாலியல் கேள்விகள்:பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை

பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?

சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதி லும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரி யான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண்ணீர், அதி க வேலைபளு, டென்ஷன், நீண்ட

நேரம் சிறுநீரை அடக்கிவைத்திருத்தல் போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலு ம், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண் கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரண ம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறு ப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளி வரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாக வும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறு நீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீள முடையது.

எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறு நீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க் கிருமிகள் மிக எளிதாக சிறு நீர்பையை அடைந்து நோய்த் தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரியசிகிச்சை அளிப்பது அவசியம்.

அறிகுறிகள்தெளிவாக இல்லாமல் கலங்கலாகவெளிவரும் சிறு நீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்ச ம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பி ல் அரிப்பு ஏற்படுதல்.

எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக் கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும் போதும் முழுமையாக சிறுநீரை வெ ளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்த மான தண்ணீரையும் கொண்டு தின மும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல் லாமல் தளர்வான உள்ளாடைகளை யே அணிவது அவசியம். ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவ தைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரை களையோ அல்லது சாதனங்களையோ அடிக்க டி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தி னால் சிறு நீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டு பெ ரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.

காபியில்உள்ள `காபின்’ என்றவேதிபொரு ள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். என வே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர் பானங்களை அதிகமாக பருகவேண் டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காம ல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள் ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரி க்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிக மாக சாப்பிடுங்கள்.
————————————————
பெண்களே! உங்களின் உடலுறவு பிரச்சனைகளை நீர் அறிவீரோ?

இயற்கையில் பெண்கள் ஆண்களை விட உடலுறவு கொள்கையில் பரவச நிலையை எட்டுவதிலும், உச்சம் அடைவதிலும் பின்தங்கியே இருப்பார்கள்; ஆகையால், ஆண்கள்தான், அவர்களின் துணை உச்சமடைய உதவ வேண்டும். இயற்கையாகவே, உடலுறவு கொள்கையில் பெண்கள், தாம் உச்சமடைவதும், அவ்வுணர்வும் தவறானது என எண்ணுகின்றனர்; இந்நிலையை பெண்களே! நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவு கொள்வதில் பிரச்சனைகள் எழலாம். உச்சமடையாமல் உடலுறவு கொள்கையில், இருபாலரும் முழுமையான இன்பத்தை அடைய இயலாது. இப்பதிப்பில் பெண்கள் உச்சமடையாமல் இருக்க என்ன காரணம் என படித்தறியலாம்..!!

தயக்கம்
பெரும்பாலான பெண்களில் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பினாலும், அது குறித்து, அறிந்து கொள்வது பெரும் தவறு என எண்ணுகின்றனர். மேலும், உடலுறவு குறித்து கற்றுக்கொள்ளவும் தயக்கம் கொள்கின்றனர். இத்தயக்கமே பெண்கள் உடலுறவினில் உச்சமடையத் தடையாக இருக்கின்றது.

பேய்கள்..!
பெண்கள், உடலுறவு கொள்கையில், உச்சமடைந்தால் தாங்கள் பெண்களே அல்ல, காமப்பேய்கள், பிசாசுகள் என்று ஒரு பிம்பத்தை தம் மனதினுள் வரையறுத்து வைத்துள்ளனர்.

வேண்டாம்..
சில பெண்கள் உச்சம் அடைவது வேண்டாத விஷயம் என நினைக்கின்றனர். மற்றும் அவர்களது துணையே அவர்களுக்கு விரும்பியவாறு தங்களை அனுபவிக்கட்டும் என்று சிலர் அசால்ட்டாக விட்டுவிடுகின்றனர்.

வேலை…
உடலுறவில் உச்சமடைவது என்பது ஆணும், பெண்ணும் கட்டித் தழுவியவுடன் நிகழும் விஷயமல்ல; அள்ளி நகையாடுதல், கொஞ்சிக் குலாவுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடல் வேண்டும். பெண்களோ இவ்வேலைகளில் ஈடுபட விரும்புவதில்லை.

தூண்டுதல்
பெண்கள் தங்களது பெண்ணுறுப்பு வாயிலாக உச்சமடைய தூண்டப்படுவதை மிகவும் தவறான விஷயமாக எண்ணுகின்றனர்; அவ்வாறு செய்கையில், ஆண்களின் மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது.

நேரம்
உடலுறவு என்பது நூடுல்ஸ் போன்ற ரெடிமேட் உணவு அல்ல, 2 நிமிடத்தில் சமைத்து முடிப்பதற்கு.., அது அறுசுவை உணவைப்போன்றது; அதன் முழு சுவையை ரசிக்க, ருசிக்க சில மணிகளாகும். ஆனால், உடலுறவில் பெண்கள் அதிக நேரம் செலவிட விரும்புவதே இல்லை.

மனநிலை
உச்சமடைய நேரமாகும் என்பதை பெண்கள் உணர்வதில்லை; தங்களுக்கு ஏதோ குறையுள்ளதைப் போல நினைத்து மனதினுள் புலம்புகின்றனர். இவவெண்ணங்கள் அவர்களை உடலுறவில் உச்சமடைய விடாமல் தடுக்கிறது.

அதிர்ச்சி
பெண்கள் மென்மையானவர்கள், வலியைத் தாங்க இயலாதவர்கள்; முதன் முறையாக உடலுறவில் ஈடுபடுகையில், கட்டாயம் வலி ஏற்படும்; அவ்வலியின் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதில்லை. மீண்டும் உடலுறவு கொள்கையில் கூட, முன்பு ஏற்பட்ட வலியை நினைத்து பயம் கொள்கின்றனர்.

அச்சம்
பெண்கள் தங்களின் முகம் உடலுறவின் போது எவ்வாறு இருக்குமோ, மற்ற உடல் பாகங்கள் எப்படி தெரியுமோ என தமது உடல் தோற்றம் குறித்த அச்சம் காரணமாக சிலருக்கு உச்சமடையாமல் இருக்கும் நிலை ஏற்படலாம்…!

கவலை
பெண்களில் சிலர், தாங்கள் உடலுறவு கொள்கையில், உச்சம் அடைவோமா? மாட்டோமா? எனும் கவலையில் மூழ்கி விடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுகையில் பெண்கள் உச்சமடையாமல் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
—————————
பெண்ணுறுப்பு நிறம் மாறினால் நோய்த்தொற்று என அர்த்தமா?

எனது பிறப்புறுப்பு திடீரென நிறம் மாறித் தெரிகிறது. வெள்ளைப்போக்கும் அதிகமாக இருக்கிறது. நோய்த் தொற்றாக இருக்குமோ என பயமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?

கருத்தரித்திருந்தால், அந்தக் காலத்தில் பிறப்புறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அவ்வப்போது அதில் நிறமாற்றம் ஏற்படும்.
சில சமயம் பிறப்புறுப்பு வெளுத்தும், நீலமும் சிவப்பும் கலந்தும், பிரசவ சமயத்தில் பழுப்பு நிறமாகவும் மாறும்.

கருப்பைக் கழுத்துப் பகுதியில் கருவின் அழுத்தத்தால் உராய்வுகள் ஏற்பட்டு புண்ணாவது உண்டு.

இதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படும். மற்றபடி, பிரசவத்துக்குப் பிறகு வெள்ளைப்போக்கு சரியாகிவிடும்.

Previous articleசந்தோஷமான வாழ்கை உங்களுக்கு அமையவேண்டுமா?
Next articleபெண்களின் இன்பத்தை தூண்டும் அந்தரங்க கட்டில்