Home ஜல்சா ஆன்லைனில் மனைவியை 6 கோடிக்கு விற்க முயன்ற கணவன்!

ஆன்லைனில் மனைவியை 6 கோடிக்கு விற்க முயன்ற கணவன்!

53

19-1474278164-1amaninukhasputhiswifeupforsaleononlineshoppingstoreebayஐரோப்பியாவை சேர்ந்த கணவர் ஒருவர் தன் மனைவி இரக்கமற்றவர், அனுதாபம் இல்லாதவர் என கூறி ஆன்லைனில் 6 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் உலகை வியக்க வைத்துள்ளது. பயன்படுத்தப்பட்ட மனைவி என்ற பெயரில் இவர் ஈ-பே ஆன்லைன் வர்த்தக தளத்தில் தனது மனைவியை 65,880 பவுன்டுகளுக்கு வாங்கிகொள்ளலாம் என விற்க முயற்சித்துள்ளார். தனது மனைவிக்கு ஸ்பெக் எல்லாம் எழுதி, உபயோகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

சைமன்! மனைவியை விற்க முயன்ற பாதகமான கணவன் பெயர் சைமன். இவர் விற்க முயன்ற இவரது மனைவி பெயர் லியான்றா. சென்ற வாரம் தான் சைமன் தனது மனைவியை விற்க முயன்ற சம்பவம் நடந்தது.

நன்மைகள், தீமைகள்! ஈ-பே போன்ற தளங்களில் ஒரு பொருளை விற்க வேண்டும் என்றால், அந்த பொருள் எதற்காக பயன்படுத்தப்படுவது, அதன் உபயோகங்கள் என்ன, நன்மைகள், தீமைகள் என்னென்ன என்பது குறித்து தெளிவாக, விவரமாக தெரிவிக்க வேண்டும். அதை மிக சரியாக செய்துள்ளார் இவர்.

அனுதாபம் இல்லை! சைமன், லியான்றா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சைமன் லியான்றாவை விற்க முயன்றதற்கு அனுதாபம் இல்லாமை தான் காரணம் என கூறியுள்ளார். அவர் தன் மீது அனுதாபம் காட்டுவதில்லை. கொலைவெறியான லியான்றா! சைமன் ஆன்லைனில் விற்க பதிவு செய்ததும், ஆறு கோடிவரை விலை அதிகரித்தது. மறுநாள் இதை ஆன்லைனில் கண்ட லியான்றா சைமன் மீது கொலைவெறி ஆனார்.

சும்மா உலலாச்சுக்கும்! ஏன் இப்படி சைமன் செய்தார் என்பதற்கு அவரே பதில் அளித்துள்ளார். ஒருநாள் வேலைவிட்டு அலுப்பாக வீடு திரும்பிய போது, லியான்றா அவர் வேலையை பார்த்துள்ளார். அதில் கொஞ்சம் காண்டானா சைமன் ஆன்லைன் விற்பது போல உலலாச்சுக்கும் பதிவு போடலாம் என முயன்றாராம். நன்மைகள்! உடலும், சருமும் இன்னும் வண்ணமும் தான் இருக்கிறது. வடிவமும் கூட, சமைப்பதில் வல்லவர் போன்றவற்றை நன்மைகள் என குறிப்பிட்டுள்ளார்.

தீமைகள்! சில சமையம் அமைதியாக இருக்க மாட்டார், கூச்சலிடுவார். நல்ல ஷைனிங்கான பிராண்ட் பொருட்கள் வாங்கி கொடுத்தால் அமைதி ஆகிவிடுவார் என தீமைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும், சைமன் தனது மனைவி குறித்து, சில சமயம் இவர் சமைப்பதை உண்டால் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம் என்றும் அந்த ஸ்பெக்கில் குறிப்பிட்டுள்ளார்.

சைமன்-ஐ கொல்ல நினைத்தேன்! கோவத்தின் உச்சிக்கு சென்ற லியான்றா, சைமனை கொன்றே விடலாம் என்று எண்ணினாராம். தனது வேலை இடத்தில் அனைவரும் என்னை பார்த்து சிரித்தனர். அதிலும், எனது அசிங்கமான படத்தை சைமன் பதிவு செய்திருந்தார். ஈ-பே அகற்றியது! ஈ-பே அந்த விற்பனை பதிவை அகற்றிவிட்டது. ஒருவேளை ஈபே அகற்றாமல் விட்டிருந்தால், இன்னும் எத்தனை விலை அதிகரித்திருக்குமோ என லியான்றா வியக்கிறார். சிரிக்க தான்! இப்படி பதிவு போட்டால் எத்தனைக்கு லியான்றா விலை போகிறார் என தமாஸ் செய்தாராம் சைமன். ஈபே எனது விற்பனை பதிவை அகற்றியதை கண்டு நான் துயரமுற்றேன் என சைமன் சிரித்தவாறே வருத்தம் தெரிவிக்கிறார்.