Home உறவு-காதல் பெண்கள் கணவனிடம் கேட்க தயங்கும் அந்தரங்க உறவுக் குறித்த கேள்விகள்

பெண்கள் கணவனிடம் கேட்க தயங்கும் அந்தரங்க உறவுக் குறித்த கேள்விகள்

530

கணவன் மனைவியின் உறவுகள்:கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்றால் சந்தேகம் தான்.

சில வீடுகளில் இன்றளவிலும் மனைவியர் கணவனுக்கு கீழ் தான் என்ற நிலையே தொடர்கிறது. இந்த காரணத்தால் தங்கள் கணவனிடத்தில் சில கேள்விகளை கேட்க, முக்கியமாக அவன் செய்யும் தவறுகள் அல்லது தங்கள் அந்தரங்க உறவுக் குறித்த கேள்விகள் கேட்க நிறைய பெண்கள் தயங்குவது உண்டு. அப்படி, மனைவியர் கணவன்மார்களிடம் கேட்க தயங்கும் இருபது கேள்விகளை தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…

#1 அன்பு கணவரே! கணவன் மனைவி ஒரே போர்வையில் உறங்கவது தவறில்லை. ஆனால், தினமும் ஒரே போர்வையில் தான் உறங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். ஒருமுறை உருண்டு படுக்கும் போது உன் நீளமான கால்கள் முழு போர்வையை உருவி எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறது. வீட்டில் கூடுதலாக ஐந்தாறு போர்வைகள் இருக்கும் போதும், ஒற்றை போர்வையில் தான் தினமும் உறங்க வேண்டுமா?

#2 அன்பு கணவரே! அவளுடன் பழகி என்னை ஏமாற்ற எப்படி உனக்கு மனது வந்தது?

#3 அன்பு கணவரே! என் வாழ்வில் எப்போதும், எதிலும் உனக்கே முதலிடம். ஆனால், உன் வாழ்வில் எப்போதும் என்னை இரண்டாம் பட்சமாக வைத்துப் பார்ப்பது ஏன்?

#4 அன்பு கணவரே! மனைவியை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்வது தான் கணவனின் தலையாயக் கடமை என்று கருதினேன். ஆனால், நீ என்னை பாதுகாக்க பெரிதாக முயற்சிகள் எடுத்ததாக நான் அறியேன்? உன் அக்கறையை நாம் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

#5 அன்பு கணவரே! நான் மிகவும் எளிமையான பெண். உன் தீண்டுதலும், அரவணைப்பும், அன்பும், எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால், உனக்கு என்னைவிட உன் வேலை தான் அதிகமாக இருக்கிறது. வேலை அவசியம் தான். ஆனால், வர்கஹாலிக் என்ற பெயரில் என்னை முற்றிலும் மறந்துவிடிவது நியாயம் தானானா? வர வர வாழ்க்கை அலுத்து போகிறது…

#6 அன்பு கணவரே! நான் உன்னிடம் புதியதாக எதையும் கேட்டுவிடவில்லை. நான் இருவரும் உறவில் இணைந்த ஆரம்பக் கட்டத்தில் நீ என் மீது எழுதிய அன்பும், அக்கறையும், நீ எனக்கு கொடுத்த முன்னுரிமை. முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும் போதும்…

#7 அன்பு கணவரே! நீ ஏன் நான் கூறுவதை காதுக் கொடுத்து கேட்பதே இல்லை. நீ எனக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக எனக்கு அரசனாக அல்லது பாஸாக இருக்க பார்க்கிறாய். இன்னும் எத்தனை நாட்கள் இதை நான் பொறுத்துக் கொண்டு போவேன் என்று நீ கருதுகிறாய்?

#8 அன்பு கணவரே! நாம் இருவரும் தான் வேலைக்கு சென்று வருகிறோம். ஆனால், வீட்டுக்குள் நுழைந்தவுடன், அது ஏன் அப்படி இருக்கு, இது ஏன் இப்படி இருக்கு என்று வெறும் கேள்விகள் மட்டும் கேட்பதை நிறுத்திவிட்டு. அதற்கு பதிலாக நீ மாறப்போவது எப்போது?

#9 அன்பு கணவரே! நீ ஏன் பார்ன் படங்கள் பார்க்கிறாய்? உனக்கு அதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது? நீ வேறு ஒரு பெண்ணின் உடலை ரசிப்பது போலவே, நான் வேறு ஒரு ஆணின் நிர்வாண உடலை ரசித்தால் உன்னை அதை பொறுமையாக ஏற்றுக் கொள்ள இயலுமா?

#10 அன்பு கணவரே! எப்போது தான் நீ எடுத்த பொருளை, எடுத்த இடத்திலேயே வைக்க கற்றுக் கொள்ள போகிறாய்?

#11 அன்பு கணவரே! இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் நீ உன் பிரிந்த காதலியின் ஃபேஸ்புக் முகவரியை தேடிப்பிடித்து லைக் போட்டுக் கொண்டே இருக்கப் போகிறாய்… வாராவாரம் நீ செய்து வரும் இந்த காரியம், எனக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

#12 அன்பு கணவரே! என் மின்னஞ்சல், ஃபேஸ்புக், மொபைல் பாஸ்வர்ட் வரை உனக்கு எல்லாமே தெரியும். ஆனால், உன் மொபைலை மட்டும் ஏதோ சிதம்பர இரகசியம் போல பொத்தி, பொத்தி பாதுகாப்பது ஏன்? எனக்கு தெரியாத அந்தரங்க இரகசியங்கள் அதில் குவிந்துக் கிடக்கின்றனவா?

#13 அன்பு கணவரே! இங்கே தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. இதுநாள் வரை நீ செய்த தவறை எல்லாம் நான் அமைதியாக, பொறுமையாக உனக்கு மட்டும் கேட்கும் பதியாக தான் எடுத்துரைத்திருக்கிறேன். ஆனால், நீ மட்டும் நான் ஏதேனும் தவறு செய்தால், காட்டுக்கத்து கத்தி ஊரே அறியும் படி செய்வது ஏன்?

#14 அன்பு கணவரே! உன் அரவணைப்பும், பாசமான வார்த்தைகளும் இன்றி நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். நான் உனக்கு இப்போது ஒரு வேலைக்காரியாகவும், அவ்வப்போது பாலியல் தொழிலாளியாகவும் தான் இருக்கிறேன். இதை நீ ஒருபோதும் அறியவில்லையா? மீண்டும் நான் உனக்கு மனைவி ஆவது எப்போது?

#15 அன்பு கணவரே! ஏன், உன் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் போது நான் ஏதோ ராட்சசி அல்ல அடங்காப்பிடாரி போல உருவகப்படுத்தி கூறுகிறாய். நான் ஒருபோதும் அப்படி நடந்துக் கொண்டதே இல்லை. அல்ல! ஆண்கள் அனைவருமே இப்படி தான் அவரவர் மனைவியரை நண்பர்களிடம் எடுத்துரைத்து பேசுவீர்களா? இது என்ன மாதிரியான சுபாவம்?

#16 அன்பு கணவரே! என்னை விட உனக்கு வேலை தான் முக்கியம் அல்லது வாழ்வின் பிராதான விஷயம் என்றால்.., நீ என்னை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமே. ஒரு கட்டத்திற்கு மேல் உன் ஈர்ப்பை கவர என்ன செய்வதென்று அறியாமல் தோற்றுவிட்டேன்…

. #17 அன்பு கணவரே! உனக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்டால், நான் அதை சமைக்காமல் போய்விட போவதில்லை. கேட்கும் போதெல்லாம் உன் விருப்பம் என்று கூறிவிட்டு. சமைத்த பிறகு உணவை விமர்சனம் செய்வது, இதை தான் சமைப்பாயா என்று வினவுவது ஏன்?

#18 அன்பு கணவரே! நீ சிக்ஸ் பேக்குடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கில்லை. ஆனால், நீ கட்டுக்கோப்பான உடல்வாகுடன், ஆரோக்கியமான உணவுண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன்…

#19 அன்பு கணவரே! நீ விரும்பும் போது மட்டும் தான் கலவ வேண்டும் என்பதும் ஆணாதிக்கம் தான் என்பதை நீ அறிவாயா?

#20 அன்பு கணவரே! கேலியும் கிண்டலும் இருக்கட்டும். ஆனால், என் மனம் புண்படும் படியாக நீ தொடர்ந்து கேலிகள் செய்து வருவதும் ஒருவகையான கொடுமையே. நீ பேசும் அதே வார்த்தைகளை கொண்டு உன் உடல் மற்றும் உன் உறவுகளை நான் கேலி கிண்டல் செய்தால் இந்நேரம் நீ என்னை விவாகரத்து செய்திருப்பாய்…

Previous articleநீங்கள் பெண்ணை இப்படியெல்லாம் தொட்டால் பாலியல் சீண்டல்தான்
Next articleயாஷிகாவை படுக்கைக்கு அழைத்த பிரபல டைரக்டர்