Home சூடான செய்திகள் உங்கள் ஆண் பெண் உறவு எப்படி பட்டது?

உங்கள் ஆண் பெண் உறவு எப்படி பட்டது?

75

சூடான செய்திகள்:பெரும்பாலான இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு காதலிக்கவே தெரியவில்லை. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பதற்குள் பாதி வாழ்க்கையே முடிந்து விடுகிறது. ஆனால், உண்மை என்னவெனில், தாங்கள் உண்மையாகவே காதலிக்கிறோமா? இல்லையா? என்று தெரியாமலேயே பதின்பருவத்தில் பலரும் ஒன்றாக சுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

பள்ளி பருவத்தில் இருந்து உண்மையாக காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

காதல்
உங்கள் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக, வெளிப்படையாக பேசுவீர்கள் பகிர்ந்துக் கொள்வீர்கள். அவர்களுடன் உங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது. எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அதை மீண்டும் பேசி கடைசியில் ஓர் தீர்வுக்கு வந்துவிடுவீர்கள். சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும், உங்களது உறவை பாதிக்காது. உங்கள் இருவருக்குள்ளும் ஓர் நேர்மை இருக்கும்.

பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் கூட அது உறவில் இருக்கும் அன்பு குறைய காரணியாக இருக்காது. ஒருவரின் மகிழ்ச்சிக்காக மற்றொருவர் விட்டுக்கொடுத்து போவது சர்வசாதாரணமாக நிகழும். ஒருவர் பற்றிய இரகசியத்தை எக்காரணம் கொண்டும் மற்றவரிடம் கூற மாட்டார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இருக்காது.

உங்கள் துணையின் குறைகள் தெரிந்தும் கூட அவரை நேசிப்பீர்கள். அவர் மேலும், வெற்றியடைய, அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்கமளிப்பார்கள். ஒருவர் மற்றொருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பார்கள். கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

காமம்
மன ரீதியான நெருக்கம் பெரிதாக தான் இருக்கும். கண்களை பார்த்து பேசுவது குறைவாக தான் இருக்கும். உண்மையை மறைக்க, பொய்களை கடத்தி செல்ல மேலும் மேலும், பொய்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். மன ரீதியான நெருக்கத்தை காட்டிலும், உடல் ரீதியான நெருக்கம் தான் அதிகமாக இருக்கும். உங்கள் அந்தரங்கள் விஷயங்களை நண்பர்களுடன் கேலியாக பேசி பகிர்ந்துக் கொள்வார்கள்.

மேம்போக்கான கருத்துக்கள் மட்டுமே பகிர்ந்துக் கொள்வீர்கள். பெருமை, தம்பட்டம் அடிக்கும் விஷயங்கள் மட்டுமே அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும். தங்களை உயர்வாக மட்டுமே எடுத்துக் கூறுவார்கள். ஆழ்மனத்தில் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இருக்காது. சண்டை, சச்சரவுகள் வந்தால், உடனே பிரிந்துவிடலாம் என்ற தான் முதலில் பிறக்கும்.

ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் மற்றவரது சுதந்திரத்தை தட்டி பறிக்க, தன்னிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள நினைப்பார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே கடினமாக இருக்கும். மன்னிக்க மனம் வராது.