Home உறவு-காதல் திருமணத்திற்கு பின் பெண்ணின் மனத்துக்குள் வரும் சந்தேகங்கள்

திருமணத்திற்கு பின் பெண்ணின் மனத்துக்குள் வரும் சந்தேகங்கள்

418

உறவுகள் புதுசு:திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா…

திருமண விழா குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில், சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை அள்ளிக் கொடுக்கும் சிறப்பான, சுவாரஸ்யமான நிகழ்வு.

திருமணம் முடிந்தவுடன், பெண்களின் மனதில் எற்படும் பல விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

திருமணம் முடிந்த முதல் நாட்களில், படுக்கையில் இருந்து எழுந்ததும், பெண்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் காலையில் நாம் மிகவும் தாமதமாக எழுந்து விட்டதால், தங்களின் மாமனார் மாமியாரிடம் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்றும்.

நீங்கள் திருமணம் செய்த கணவர், நீங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த ஒன்றாக இருந்தாலும், உங்கள் மனதில் நினைத்ததை போல் உங்களுக்கு சரியான ஜோடியாக இருப்பாரா? அவரை எப்படி கையாளுவது என்பது குறித்த பல குழப்பங்கள் ஏற்படும்.

திருமணம் பற்றி இப்போது தான் பேசியது போல இருக்கும். ஆனால் விரைவாக திருமணம் நடந்து முடிந்து விட்டது என்ற எண்ணங்கள் தோன்றுவதால், உங்கள் கணவருடன் இருக்கும் இந்த நொடியில் பெற்றோர்களுடம் இருந்த பழைய நினைவுகள் அனைத்தும் பெண்களின் மனதில் அவ்வப்போது வந்துச் செல்லும்.

பெண்கள் அவர்களின் கணவரின் புதிய வீட்டில் இருக்கும் போது, எந்த மாதிரி ஆடை அணிவது என்ற எண்ணம் தோன்றுவதால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு ஆடையை எடுக்கும் போதும், புதிதாக திருமணம் ஆனதால் இதை அணிவது சரியாக இருக்குமா? என்ற கேள்விகள் எற்படும்.

திருமண வைபவங்கள் முடிந்த பிறகு, நீங்கள் நீங்களாக இருந்து, உங்களை சுற்றி நடப்பதை எண்ணி பதற்றமடைவதை விட்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கலாம் என்ற களிப்பூட்டும் உணர்வுகள் உங்களுக்கு ஏற்படும்.

திருமணம் ஆன பெண்கள் கணவரின் வீட்டிற்கு முதன் முதலில் சென்று, சமைக்கும் போது, அது தன்னுடைய மாமனார் மாமியாரிடம் பிடிக்குமா? நான் அவர்களிடம் நல்ல பெயரை எடுப்பேனா என்ற எண்ணங்கள் தோன்றும்.

திருமணம் முடிந்த கடந்த சில வாரங்களாக பெண்கள் மிகவும் பிசியாக இருப்பதால், உங்களுடைய உறவுமுறை ஸ்டேடஸை ஃபேஸ்புக்கில் மாற்ற எப்போது நேரம் கிடைக்கும் என்று நினைப்பீர்கள். ஏனெனில் தன்னுடைய அருமையான திருமண கோலாகலத்தை உலகத்திற்கு தெரிவிக்கும் ஆசைகள் சிலருக்கு ஏற்படும்.

திருமணமான உடனேயே அந்த தம்பதிகள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மிக அருமையான தேன்நிலவை எந்த இடத்தில் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடுவது என்று பலவிதமான கற்பனைகள் தோன்றும்.உங்களின் வாழ்க்கையில், வாழ்க்கையைப் பற்றி உணர்கின்ற நேரம் கடைசியாக வந்து விட்டது. பிஸியான நாட்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு மத்தியில், உங்கள் வாழ்க்கையில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றத்தை உணர முடியாத நிலையில் இருப்பதாகத் தோன்றும்.

Previous articleஏன் முதல் இரவில் மல்லிகை பூ பயன்படுத்துகிறார்கள் ?
Next articleதிருமணத்திற்கு பின் பின்புறம் பெரிதாவதற்கான காரணங்கள் இதுதான்