Home உறவு-காதல் திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் பேசுதல் சரியா?தவறா?

திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் பேசுதல் சரியா?தவறா?

252

பெண்கள் ஆண்கள் உறவு:எனக்கு விரைவில் திருமணமாகப் போகிறது. “திருமணத்துக்கு முன் நீயும் உன் மனைவியும் திருமண ஆலோசனை மையத்துக்கு சென்று வாருங்கள்“ என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். இப்படி ஆலோசனை பெறுவது அவசியமா?

பல பேர் நினைக்கிறார்கள் – ஆண்களும் பெண்களும் வெறும் உடலமைப்பினால் மட்டும்தான் வேறுபாடு உள்ளவர்கள், மற்றபடி மூளை இருவருக்குமே ஒன்றுதான் என்று. ஆனால், உண்மை என்ன தெரியுமா? ஆண் மூளையும் பெண் மூளையும் வெவ்வேறு விதமாகத்தான் வேலை செய்கின்றன.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் பெண் மூளையில் உணர்ச்சிகளைக் கிரகித்துக் கொள்ளும் மையம், மொழிவளத்துக்கான மையம், முகச்சாடையை வைத்து ஆட்களை எடை போடும் மையம் இவை எல்லாம் பெரிய அளவில் இருக்கின்றன – ஆண் மூளையில் இந்த மூன்று மையங்களுமே சின்ன சைஸ்தான்!

அதனால் ஆண்களுக்கு “வளவளவென்று“ பேச வராது. தான் உணரும் அந்த உணர்ச்சியை மொழியால் விவரிக்கத் தெரியாது. எதிராளியின் முகபாவத்தை வைத்து அவர் மனத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாது.

ஆண் மூளையின் அமைப்பு காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் அவனுக்குக் கவர்ச்சியான காட்சிகளைப் பார்த்தால்தான் சந்தோஷம். பெண் மூளையின் அமைப்பில் மொழிக்கே முக்கியத்துவம் என்பதால் அவளுக்கு சதா எதையாவது பேசவும் கேட்டுக் கொண்டிருக்கவும்தான் பிடிக்கும்.

இதுமாதிரி அடிப்படையான குண வேறுபாடுகள் பல உள்ளன. ஆனால் இதுபற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் திருமணம் புரிந்துகொண்டு, நிறைய எதிர்பார்ப்புகளுடன் துணைவரை அணுகும்போது – ஆண் ஆசை வார்த்தைகள் பேசவில்லை என்று மனைவி நொந்து போவதும், பெண் அவன் படுக்கை தேவைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்று கணவன் நொந்து போவதும், இப்படியே ஆரம்பிக்கும் விரிசல்கள் மணவாழ்க்கையை முழுதாகப் பிளந்து விவாகரத்து வரை கொண்டுபோய் விடுவதும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இப்படி “என் மனசைப் புரிஞ்சிக்கவே இல்லை“ என்று புலம்பும் தம்பதிகளுக்கு, மனம் இருபாலினருக்கும் எப்படி வித்தியாசப்படும், அந்த வித்தியாசங்களை எப்படி லாகவமாகக் கையாண்டு, கரை காணலாம் என்கிற சூட்சமங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக் கொடுத்துவிட்டால் தாம்பத்யம் தொடர்ந்து தித்தித்துக் கொண்டே இருக்குமே!

முன்பெல்லாம் வாழ்வியல் விஷயங்களை யாரும் வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொண்டது இல்லை. அவரவரே அடிபட்டு கற்றுக்கொண்டதோடு சரி. ஆனால் இப்போதெல்லாம் மனத்தை ரிலாக்ஸ் செய்ய வேண்டுமா? கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமா? நினைவாற்றலை மேம்படுத்த வேண்டுமா? மணவாழ்வை அதிக சுவாரசியமாக்க வேண்டுமா? – எல்லாவற்றுக்கும் தனித்தனி வகுப்புகள் உள்ளன. தனிப் பயிற்சி பெறுவது நடைமுறை ஆகிவருகிறது.