Home ஆண்கள் ரன்னிங் எப்படி ஆணுறுப்பு மற்றும் ஆண் விதைகளை பாதிக்கிறது என்று தெரியுமா?

ரன்னிங் எப்படி ஆணுறுப்பு மற்றும் ஆண் விதைகளை பாதிக்கிறது என்று தெரியுமா?

155

ஆண்களுள் சிலருக்கு தினமும் ரன்னிங் ஓடும் பழக்கம் இருக்கும். இப்படி தினமும் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், அது ஆண்களது ஆணுறுப்பை பாதிக்கும் என்பது தெரியுமா? சில நேரங்களில் ரன்னிங் பயிற்சி ஆணுறுப்பிற்கு நன்மையும் விளைவிக்கும். இங்கு ஆண்கள் தினமும் ரன்னிங் பயிற்சி மேற்கொள்வதால், அது எப்படி ஆணுறுப்பை பாதிக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண் விதையில் வலி அளவுக்கு அதிகமாக ஆண்கள் ஓடும் போது, வெரிகோசெலெ என்னும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் வெரிகோசெலே மரபணுக்களால் ஏற்படும். இந்நிலையால் பாதிக்கப்பட்டால், ஆண் விதையில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

இரத்த ஓட்டம் தடைப்படும் இறுக்கமான ஷாட்ஸ் மற்றும் லெக்கிங்ஸ் அணிந்து ஓடும் போது, இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டம் தடுக்கப்படும். ஒருவேளை ஓடும் போது கடுமையான வலியை ஆண் விதையில் உணர்ந்தால், உடனே ஓடுவதை நிறுத்துங்கள்.

விறைப்பு பிரச்சனை ஏற்படாது தினமும் ஆண்கள் சிறிது தூரம் ரன்னிங் ஓடும் போது, அது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்பு பிரச்சனை ஏற்படுவதைத் தடுப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அளவுக்கு அதிகமான ஓட்டம் விந்துவின் தரத்தை குறைக்கும் ஒரு ஆண் அளவுக்கு அதிகமான தூரம் ஓட்டத்தை மேற்கொண்டால், அது 28 சதவீதம் டெஸ்டோஸ்டிரோன் சுழற்சியைக் குறைத்து, விந்துவின் தரத்தைக் குறைக்கும்.

கருவளத்தை அதிகரிக்கும் மற்றொரு ஆய்வில் தினமும் போதிய அளவில் ரன்னிங் பயிற்சியை ஆண்கள் மேற்கொண்டால், விந்துவின் வலிமை அதிகரித்து, கருவளம் மேம்படும்.