Home ஆண்கள் ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் “பலே” வைட்டமின்கள்!

ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் “பலே” வைட்டமின்கள்!

29

ஆண்களின் கருவுறும் தன்மை யை அதிகரிக்கும் பலே வைட்ட மின்கள்!


இன்றைய நாட்களில் தம்பதியர்க ள் பலரும் தாங்கள் கருத்தரிக் கும் பொருட்டாக அதிக அளவு முயற் சிகளை மேற்கொள்வது பரவலாக வே அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், துணைவரின்
உடல் நிலை, செய்முறைகள், மருந்துகள், உடலிலுள்ள குறைபாடுகள் போன்ற பல காரண ங்களும் கருவுறுதலை தொட ர்புடைய காரணிகளாக உள் ளன. கருவுறுவதற்கான முய ற்சிகள் தொடர்ந்து தோல்வி யடையும் தம்பதியர்கள் ஒரு நல்ல மருத்து வரை சந்தித்து அறிவுரை பெறுவது மிக அவ சியமாக அமைகின்றது. இந்த அறிவுரை வழியாக அவர்கள் கரு வுரும் முயற்சியில் எந்த இட த்தில் தவறு செய்கிறார்கள் என்று அறிவதும் மற்றும் பின் நாட்களில் அந்த தவறு களை களைவதும் மிகவும் முக்கியமான விஷயமாகு ம்.
சில சமயங்களில் வைட்ட மின்குறைபாட்டு போன்ற சாதாரண பிரச்னையாகவும்கூட இருக் கலாம். ஆண்கள் தங்க ள் ஆரோக்கியத்தை பேணுவ தன் மூலமாக கருத்தரிக் கும் வாய்ப்புகளை அதிகரி க்க முடியும். ஆண்களின் விந்துக்களின் தன்மை மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத் தும் வைட்ட மின்கள் குறைவாக இருந் தால், கருவுறும் வாய்ப்பு கள் வெகுவாக குறைந்துவிடும். சில வைட்டமின் குறைபாடுகள் ஆண்களின் ஆசையையும் மற் றும் செயல்பாட்டையும் குறை த்து விடுவதால் கருத்தரிக்கும் முறையில் எதிர்மறையான வி ளைவுகள் ஏற்படுகின்றன. ஆ கையால் ஆண்களின் கருவு றும் திறனை அதிகரிக்க வைட் டமின்கள் அதிக அளவில் தேவைபடுகின்றன.
இன்றைய நவீன காலத்தில் ஆண்களின் கருவுறும் திறனை மிக வும் பாதிப்பிற்கு உள்ளாக்கிடும் முக்கியமான விஷயமாக ஆண் களின் மன அழுத்தம் உள்ள து. குறைந்த அளவு வைட்ட மின உள்ள உணவை உட்கொ ள்வதன் மூலம் விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக் கை ஆகியவை குறைகின்ற ன. அது மட்டுமல்லாமல் 90% ஆண்களின் கருத்தரிப்பு தன் மை குறையக் காரணம், அவர்களிடம் குறைந்த எண்ணிக்கை யிலான விந்து உற்பத்தி அல்லது ஆரோக்கியமற்ற விந்துதன்மை அல்லது இரண்டு பிரச் னைகளாலுமே ஏற்படுகி ன்றன. மீதம் உள்ள ஆண் கள் குறைபாடுகள், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை கள், ஹார்மோன் சம நிலையின்மை மற்றும மரபணு கோளாறுகள் போன்றவை உள்ளன.
ஆண்களின் கருவுறும் தன் மையை அதிகப்படுத்தும் வைட்டமின் கள் பற்றி இப் போது காண்போம்.
வைட்டமின்கள்
வைட்டமின் பி12, வைட்ட மின் சி, வைட்டமின் ஈ மற் றும் ஃபோலிக் அமிலம் போன்ற பல வைட்டமின்க ள் ஆண்களின் விந்துகளை அதிகப்படுத்துகின்றன. குறிப்பாக ஃ போலிக் அமிலத்தின் குறைபாடு குறைந்த விந்துகளையும் அல் லது ஆரோக்கியமற்ற விந்துக்க ள் உற்பத்தியாகவும் காரணமாக உள்ளது. நீங்கள் ஃபோலிக் அமி லத்தை உட்கொண்டால் விந்து களின் ஆரோக்கியத்தை அதிகரி க்கும். எனவே ப்ராக்கோலி, பச லைக்கீரை, பட்டாணி, அஸ்பார கஸ் ஆகியவற்றை அதிகம் உண வில் சேர்த்துக் கொள்வது நல்ல து.
ஜிங்க்
செலினியம் மற்றும் துத்த நாகம் (Zinc) போன்ற கனி மங்கள் விந்துக்களை அதி கமாக உற்பத்தி செய்ய உத வுகின்றன. கடல் சிப்பி, பி ரேசில் நட்ஸ், பட்டாணி, டூ னா மீன்கள் ஆகியவற்றில் இத்தகைய கனிமங்கள் அத்கம் இருப் பதால் இவை நிச்சயமாக வி ந்துகளை அதிகரித்து கருவுறும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன.
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ குறிப்பாக விந்தணுக்களை அதிக அளவில் உரு வாக்க வகை செய்கின் றது. இதனால் ஆண்களின் கருத்தரிக்கும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. சில சமயங் களில், விந்துக்கள் அதிக அளவில் உருவா னாலும் அதன் வீரியம் குறைவாக உள்ள து. வைட்டமின் ஈ ஏறத்தாழ 10 சதவிகிதம் விந்தின் தன்மை யை சரி செய்து, அதை வீரியமான நிலைக்கு கொண்டு வருகிறது. இத் தகைய வைட்டமி ன் ஈ நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயா போன் றவற்றில் அதிகம் உள்ளது.
கார்னைட்டின்
கார்னைட்டின் ஆண்கள் கருத்தரிக்கும் வா ய்ப்பை அதிகரிக்கிறது. விந்துக்கள் பெண் முட்டையை தேடி வெகு தூரம் சென் றடைய அதிகளவு சக்தி தேவைப்படுகின்றது. கார் னைட்டின் விந்திற்கு தேவையான சக்தியை தந்து அது பயணம் செய்யும் போது எரிந்து சக்தியை செயல்படுத்துகிறது. இத்தகைய கார்னைட்டின் மாட்டி றைச்சி, சிக்கன், பால் பொருட்கள் போன்ற வற்றில் அதிகம் உள்ள து.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தின் தன் மையை அதிகரிக்க உதவுகின்றன. வைட்ட மின் சி மற்றும் இ, கோ-என்சைம் Q10 (Co Q10), செலினியம், N-அசிடைல்சிஸ்டைன் (NAC) ஆகியவை விந் துக்களின் வீரியத்தை அதிகரிக்க உதவுவதை உறுதிப்படுத்தியுள் ளன. நல்ல செல்களின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் டுகளில் விந்துக்களின் எண்ணிக்கை அதிக ளவிலும் மற்றும் நகரும் தன்மையுடனும் உள்ளன. இதன் மூலம் விந்தணுவின் வீரியம் அதிகரிக்கின்றன. ஆகவே பெர்ரிப் பழங்கள், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை உணவில் சேர்த்தக் கொள்ள வேண்டும்.
லைக்கோபீன்
தக்காளி, தர்பூசணி மற்றும் பல பழங்களு க்கு சிவப்பு நிறத்தை தரும் லைக்கோபீன் என்ற கரோடினாய்டு நிறமி இயற்கையாக வே கிடைத்து வருகிறது. குறைந்த அளவு லைக்கோபீனை உணவில் சேர்த்துக் கொ ண்டால், அது குறைந்த அளவு வீரியமுள்ள விந்துக்களை உற்பத்தி செய்து ஆண்களிடம் மலட்டு தன்மையை உண்டாக்குகிறது. இத் தகைய குறைகளுடன் ஆண்கள் இருந்தா ல் லைக்கோபீன் உட்கொள்வதன் மூலம் விந் துக்களை அதிகப்படுத்தவும், நல்ல ஆரோக்கியத்துடன் பெருக்க வும் முடியும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டு மல்லாமல் விந்தின் குறிப்பிட்ட மெல்லிய தோலை பலப்படுத்தி முட்டையுடன் சேர்ந்து உயிருள்ள கருவை உருவாக்க உதவுகிறது. ஒமேகா-3 குறைபாடின் காரண மாக விந்துக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்துக்களின் செயல் திறன் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே கடல் உணவுக ளான மீன்க ளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வைட்டமின் டி
வைட்டமின் டி குறைவாக இருந்தாலும் ஆண்களிடம் மலட்டு த்தன்மை ஏற்படும். வைட்டமின் டி-யை ஆய்வு கூடங்களில் வைத்து பரிசோதிக்கும் பொருட்டாக விந்த ணுக்களில் சேர்த்த போது, அவை அதிக அளவு விந்தியக்கத்தை ஏற்படுத்துவதை தெளிவாக காண முடிந்தது. அதோடு மட்டு மல்லாமல் விந்தணு முட்டையை வேகமா க வந்தடைய உதவும் ‘அக்ரோசம் ரியாக்ஷன்’ புரியவும் உதவுகி றது.