Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் இடுப்பெலும்பை உறுதியாகவும் அழகாகவும் உதவும் ஆசனம்

பெண்களின் இடுப்பெலும்பை உறுதியாகவும் அழகாகவும் உதவும் ஆசனம்

76

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பெலும்புகள் நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இடுப்பெலும்பை உறுதியாக்கும் விஷ்ணு ஆசனம்
செய்முறை

விரிப்பில் வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.

காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும். இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பலன்கள்

இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.