Home பாலியல் விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை

விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை

75

13176400655454அப்படியென்றால்?
அதாவது, உடலுறவின்போது விந்து வெளியேறுவதற்கு சற்று முன்பு ஆண்குறியை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்துவிடுவதன் மூலம் கருத்தரித்தலைத் தடுக்கும் முறை. பெண்ணுறுப்பிற்குள் விந்தணு நுழைந்து கருவுறாமல் தடுப்பதே இதன் நோக்கம். இது உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட பழைய கருத்தடை முறைகளில் ஒன்று.

இதில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் சில:
செலவில்லை, எளிதானதும் கூட!
மருந்துகள் எதுவும் தேவையில்லை
சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டியதில்லை
எதையும் உடன் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டியதில்லை
முன்பே திட்டமிட வேண்டியதில்லை, அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை
மதங்களும் இம்முறையை ஏற்கின்றன
பிற கருத்தடை முறைகளைப் பயன்படுத்த விரும்பாத சில தம்பதியர் இந்த முறையை முயற்சி செய்கின்றனர்.
இந்த முறையில் உள்ள குறைபாடுகள் என்ன?

புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் சமயத்தில், ஆணுறுப்பை வெளியே எடுப்பதற்கு மிகுந்த சுயக்கட்டுப்பாடு தேவை. ஏனெனில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது இன்னும் உள்ளே நுழைத்து விந்தை வெளிப்படுத்துவதற்கான உந்துதலே இயற்கையாக ஏற்படும்.
விந்து வெளிவருவதற்கு முன்பு பாலியல் தூண்டுதலின் காரணமாக ஆண்குறியில் இருந்து வரும் திரவங்களில் இருக்கும் விந்தணுக்களால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது, இதனால் எதிர்பாராதவிதமாக கருவுற்றுவிட வாய்ப்புள்ளது. சமீபத்தில் விந்து வெளியாகியிருந்தால் இந்தத் திரவங்களில் விந்தணுக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

போதுமான நேரத்திற்கு முன்பே ஆண்குறியை வெளியே எடுக்கத் தவறுவதால் விந்து பெண்ணுறுப்புக்குள் செல்வதே பெரும்பாலும் எதிர்பாராத கருத்தரிப்புக்குக் காரணமாகிறது.
விந்து வெளியே வரும்போது ஆண்குறி பெண்ணுறுப்பில் இருந்து நன்கு தள்ளி இருக்க வேண்டும். ஆகவே புணர்ச்சிப் பரவசநிலை உருவாவதற்கு போதுமான நேரத்திற்கு முன்பே ஆண்குறியை வெளியே எடுக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் பெண்ணுறுப்பின் வெளி இதழ்களில் விந்து பட்டதினால் சிலர் கருவுற்றுள்ளனர்..

சரியான நேரத்தில் வெளியே எடுப்பதற்கு, ஆண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலையின்போது விந்து ஒரே சமயத்தில் மொத்தமாக வெளியேறவேண்டும். ஆனால், சில ஆண்களுக்கு இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப வெளியேறும். அதுமட்டுமின்றி, களைப்பு அல்லது ஆல்கஹால் பாதிப்பால் விந்து வரப்போகிறது என்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம்.
இப்படி விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் முறையைப் பயன்படுத்துவதால், பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்க முடியாது.
இந்த முறையைப் பின்பற்றும் சில தம்பதிகள் புணர்ச்சிப் பரவசநிலை மற்றும் விந்து வெளியேற்றத்தின்போது கிடைக்கும் மகிழ்ச்சியில் இது குறுக்கிடுவதாக உணருகின்றனர்.
சில ஆண்கள் தமக்கு விந்து வரப்போகிறது என்பதை உடனே உணர முடியாமல் இருக்கலாம், அல்லது சரியான நேரத்தில் வெளியே எடுக்கும் அளவிற்கு மனதில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம், இப்படிப்பட்டவர்கள் இந்த முறையைப் பின்பற்ற முடியாமல் போகலாம்.
சில ஆண்களுக்கு, வெளியே எடுக்க வேண்டிய மன அழுத்தத்தால் ஆண்மை குறைவு அல்லது சீக்கிரமே விந்து வெளியேறுதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
பெண்களுக்கும், மீண்டும் மீண்டும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டு கடைசியில் புணர்ச்சிப் பரவசநிலை அடையாமல் தோல்வியில் முடிவது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இந்த முறையை எப்படி சிறப்பாகப் பயன்படுத்திப் பழகுவது?
எப்போது ஆண்குறியை வெளியே எடுக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக முடிவெடுக்க வேண்டும்: ஆண் தனக்கு விந்து வெளியேறப்போகிறது என்று உணர்ந்ததும் உடனடியாக ஆணுறுப்பை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்து பெண்ணுறுப்பின் வெளி இதழ் பகுதிகளிலிருந்து தொலைவில் விந்தை வெளியேற்ற வேண்டும்.
மீண்டும் உடலுறவு கொள்ளுதல்: ஒரு முறை உடலுறவில் ஈடுபட்ட பிறகு கொஞ்ச நேர இடைவெளியில் மீண்டும் உடலுறவில் ஈடுபட நினைத்தால், ஆண் சிறுநீர் கழித்துவிட்டு ஆண்குறியின் முனையை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த விந்து ஆணுறுப்பின் மீது இருந்தால் அதை அகற்றலாம்.
சரியான நேரத்தில் ஆண்குறியை வெளியே எடுக்காததால் கர்ப்பம் தரிக்குமோ என்று கவலைப்பட்டால், அவசர கருத்தடை நடவடிக்கை குறித்து ஆலோசனை பெற உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.