Home ஆரோக்கியம் உங்களுக்கு வரும் தலைவலி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு வரும் தலைவலி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

85

பொது மருத்துவம்:தலைவலி அனைத்து வயதுடையவர்கள் மத்தியிலும் வரக்கூடிய ஒன்று. வலி தலையில் எங்கு ஏற்பட்டாலும் தலைவலியே. அது ஏன் வருகிறது? அதன் வகைகள் என்ன?

பெரும்பாலும் தலைவலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய ஒன்று. வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்ககூடும். அதிக வெளிச்சம், தூக்கமின்மை, பலத்த காயம் என்று காரணங்கள் அதிகம் கூறலாம்.

இதன் வகைகள் உளைச்சல் தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி என்று வகைப்படுத்தலாம்.

உளைச்சல் தலைவலி

இதனை டென்ஷன் தலைவலி என்றும் கூறுவர். மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்படுகிறது என்றால் அது டென்ஷன் தலைவலியாகத் தான் இருக்கும். தலையை சுற்றி ஒரு இறுக்கமாக இருப்பதைப் போல உணர்வைக் கொடுக்கும். கழுத்தோடு வலியும் இறுக்கமாக இருக்கும்.

இந்த தலைவலி கம்பியூட்டர் அதிகம் பார்ப்பதனால், விடியோ கேம் விளையாடுவதால், மெஷின்களை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரக்கூடும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி கூட மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒன்று தான். பிள்ளைகளுக்கு அதிகம் வரும் ஒன்று. இது குடும்பத்தில் எவருக்கேனும் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புண்டு.

வயிற்று வலி, வாந்தியால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியோடு வரக்கூடிய ஒன்று.

அதிகமான வெளிச்சத்தை பார்த்தாலும் இந்த ஒற்றை தலைவலி வரும். குறிப்பிட்ட நேரங்கள் அதீத வெளிச்சத்தை பார்த்தால் தலைவலியானது வர நேரிடும்.

கிளஸ்டர் தலைவலி

மற்ற அனைத்து தலைவலிகளை ஒப்பிட்டு பார்க்கையில் கிளஸ்டர் எனும் தலைவலி தான் அதிகம் வலிக்ககூடிய ஒன்றாகும்.

வித்தியாசமான ஒரு வலியும் கூட. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வரும், வந்தாலும் கடுமையான வலியாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு கிளஸ்டர் காலப்பகுதி இருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல கிளஸ்டர் தலைவலி மாறுபடும். சிலருக்கு கொத்தாக வரக்கூடும், சிலருக்கு எப்போதாவது வரும். வருடங்களுக்கு பல முறையும் வரலாம் அல்லது இரு முறையும் வரலாம் அவரவர் உடல்நிலை பொறுத்தே அமையும்.