Home அந்தரங்கம் வீட்டுக்காரர் கோவிச்சுக்கிட்டாரா? சரண்டர் ஆயிருங்க!

வீட்டுக்காரர் கோவிச்சுக்கிட்டாரா? சரண்டர் ஆயிருங்க!

79

தம்பதியரிடையே ஊடல் ஏற்படாத வீடே இருக்காது. அப்படி இருந்தால் சுவாரஸ்யம் இல்லாத சப்பென்றுதான் இருக்கும். சின்ன சின்ன சண்டைகள் இருக்கும் வீடுகளில்தான் பெரிய அளவில் சந்தோசம் இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சில வீடுகளில் மனைவி அடிக்கடி கோவித்துக்கொள்வார். சில வீடுகளில் கணவர் கொஞ்சம் கோபக்காரராக இருப்பார். கோபமாக இருக்கும் கணவரை சமாதானம் செய்வதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். என்ன செய்தால் கணவரை வழிக்கு கொண்டுவரலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

கோபக்கார கணவரை பொங்கி வழியும் எரிமலைக்கு சமமாக ஒப்பிடுவார்கள் பெண்கள். அந்த எரிமலையை குளிர்விக்க ஒரே வழி சரண்டர்தான். கணவர் கோபமாக பேசுகிறாரா? பதிலுக்கு பேசி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை விட பேசாமல் அமைதியாகிவிடுங்கள். உங்களவர் அமைதியாக மாறித்தான் ஆகவேண்டும்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போய்விட்டாரா? வேறு வழியே இல்லை செல்போனில் சாரி, மிஸ் யூ, ஐ லவ்,யூ மெசேஜ்களை விடாமல் தட்டிவிடுங்கள். அப்புறம் அதில் இளகி வீட்டுக்கு வந்து விடுவார்.

கணவரின் கோபம் அதிகமாயிருச்சா? சாப்பிட மறுக்கிறாரா? அவருக்கு பிடிச்ச டிஷ் செய்து கொண்டு போய் அவர் முன்னால் வைத்தால் அந்த வாசனை அவரை ஈர்க்கும். அப்புறம் கோபம் இருந்த இடத்தில் இருந்து பறந்து போய்விடும்.

எதனால் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மறுபடியும் அதேபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே தவறை திரும்ப திரும்ப செய்தால்தான் பிரச்சினை ஏற்படும். எனவே சண்டைக்கோழியாக இருப்பதை விட சரண்டர் ஆகி வெள்ளைக் கொடியை பறக்க விடுங்கள். உடனே ஊடல் முடிந்து கூடல் தொடங்கிவிடும்.